sampling error
மாதிரியெடுத்தலில் ஏற்படும் தவறுகள்
தமிழ் விளக்கம்
பெரும் எண்ணிக்கையை உள்ளடக்கி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியாதிருக்கும் வேளைகளில் மாதிரி எடுப்பு முறையியல் தகுந்த பயனைத் தருகின்றது. மாதிரி எடுப்பு பொருத்தமான முறையிலும், திருத்தமான முறையிலும் அமையும் பொழுதுதான் ஆய்வு பொருண்மை கொண்டதாக அமையும். எந்தத் தொகுதியை (மக்கள், நிகழ்வுகள்) ஆய்வுக்கு உட்படுத்த நினைக்கிறோமோ, அந்தத் தொகுதியின் முழுமைப் பண்பை பிரதிநிதிப்படுத்தும் வகையில் அதில் ஒருசிலவற்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் செயல்பாட்டை மாதிரியெடுத்தல் எனலாம். ஆய்வுத்தொகுதியை பிரதிநிதிப்படுத்தாத வகையில் எடுக்கப்படும் மாதிரிகளை, மாதிரியெடுத்தலில் ஏற்படும் தவறுகள் எனலாம்.
English
Generalizing about the characteristics of a population from a sample that is not totally representative.