sanction
அனுமதி, இசைவாணை, ஒப்பளிப்பு, வழங்காணை, ஒப்புதலாணை, ஒப்புதலளி, மேலிட ஒப்புதல், ஒப்புதலுறுதி, பிரமாணம், உறுதியீடு, நடைமுறை ஆதரவு, சட்ட ஆதரவு, சட்டத்தீர்ப்பு, தண்டனைத்திறன், விதிமுறைத் தண்டம்,
தமிழ் விளக்கம்
அனுமதி மற்றும் தண்டனை என்ற இருவேறு பொருள்பட பயன்படுத்தப்படும் வார்த்தை. 1. உயரதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டத்தையோ அல்லது செயலையோ முன்னெடுக்கக் கொடுக்கப்படும் அனுமதி. 2. விதிகளை மீறிய தனிநபர்களையோ அல்லது நிறுவனங்களுக்கோ சட்டரீதியாகவோ அல்லது ஒழுங்குமுறை சார்ந்த முன்னுதாரணர்களாலோ வழங்கப்படும் தண்டனை. எடுத்துக்காட்டாக தொழில்நெறியை மீறிய சமூகப்பணியாளர்களுக்கு அவர்களுக்கு உரிமம் வழங்கிய நிறுவனங்கள் வழங்கும் பணித்தடை.
பார்க்க: informal sanction - இயல்பான அனுமதி, முறைசாரா அனுமதி - ஒரு மனிதர் எப்படி, எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும், எப்படிப் பணியாற்ற வேண்டுமென்பதற்கு அவருடைய குடும்பம், அவர் சார்ந்த குழு, அவர் சார்ந்த நிறுவன நபர்கள் கொடுக்கும் சமூக அழுத்தமே இயல்பான அனுமதி எனப்படுகிறது. இந்த அனுமதி புன்னகை அல்லது முறைத்தல் மூலமாகவோ, ஒரு செயலில் சேர்த்துக்கொள்ளல் அல்லது விலக்குதல் மூலமோ, கருத்துக்களை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பதன் மூலமாகவோ தரப்படுகிறது. இயல்பான அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமல்ல ஒத்த தன்மையுள்ள குழுக்கள் மற்றும் இனக்கூட்டதிற்கும் பொருந்தும்.

English
1. Permission to carry out or official ratification of some plan granted by the established authority. 2. A provision in law or a response by a reference group that penalizes an individual for not conforming. For example, social workers who are found to have violated their professional code of ethics may be subject to sanctions in the form of suspension from the organization or of the license to practice. See also informal sanction.