sanctuary
சரணாலயம், புகலரண், காப்பிடம், காவலிடம், வழிபாட்டிடம், புகலிடம், திருக்கோயிலகம், தெய்வமனை, திருக்கோயில் கருமனை, புனித இடம்
தமிழ் விளக்கம்
சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப்படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும். இது இலத்தீனியச் சொல்லான sanctuarium என்பதிலிருந்து உருவானது. -arium என்ற பின்னொட்டுக்கு பேணும் கலன் என்பது பொருளாகும். இவ்விடத்தில் புனிதப் பொருட்கள் அல்லது புனிதர்களைப் பேணுதல் (sancta or sancti) என்பதாகும். கோவில், மசூதி, தேவாலயம், பலிபீடம் (altar) போன்றவைகளும் சரணாலயங்களாகப் போற்றப்படுகின்றன.
சரணாலயங்கள் (Sanctuary) என்பவை விலங்குகள், தாவரங்கள், நிலப்பரப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள பொருட்கள் பொன்றவற்றைப் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளவை ஆகும். வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்க, கொல்ல தடை செய்யப்பட்டுள்ள காட்டுப் பகுதி சரணாலயம் எனப்படும். இயற்கையின் பரிணாம வளர்ச்சி சீராக நடைபெற எந்தெந்த உயிரினம் எந்தெந்த இடத்தில் உள்ளதோ அந்தந்த இடத்தில் அவை இயல்பாக வாழ, வளர அனுமதிப்பவை சரணாலயங்கள். இந்தியாவில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் வனவிலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வீரம் என்று மகிழ்ச்சி அடைவதும், அதன் இறைச்சியை உண்பதும், இறைச்சியை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்துவதுமாக பல நோக்கங்கள் இருக்கின்றன. இந்த நோக்கங்களால் அரியவகை வனவிலங்குகளும், பறவைகளும் இன்று இல்லாமல் போய்விட்டன. இனியும் இந்த நிலை நீடிக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இந்திய அரசும் மாநில அரசுகளும் 247 வனவிலங்கு சரணாலயங்கள், 55 தேசீயப் பூங்காக்களையும் உருவாக்கிப் பராமரித்து வருகின்றன. தமிழகத்தில், உயிரினங்கள் பாதுகாப்புக்கு எட்டு சரணாலயங்கள்; 13 பறவை சரணாலயங்கள்; ஐந்து தேசியப் பூங்காக்கள்; மூன்று புலிகள் சரணாலயங்கள்; நான்கு யானை சரணாலயங்கள்; மூன்று பல்லுயிர் பெருக்கத் தளங்கள் உள்ளன.

English
A place of refuge or protection.