sandwich generation

இருதலைமுறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட தலைமுறை, மத்தளத் தலைமுறை, உடுக்கைத் தலைமுறை

தமிழ் விளக்கம்

இடையீட்டப்பம் (sandwitch) என்றால் இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு இடையே வைக்கப்பட்ட மாமிசம் மற்றும் காய்கறிகளைக் குறிக்கும். அதுபோல, நடுவயதை அடைந்தவர்கள், தங்களின் வயதான பெற்றோர்களைப் பராமரிக்கவும், வளர்ந்துவரும் தங்களின் குழந்தைகளைப் பாராமரிக்கவுமான இரண்டு பொறுப்புகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டிய நிலையில் உள்ளவர்கள். மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்பதுபோல், மாறுபட்ட தேவைகளையும், விருப்பங்களையும் கொண்ட முதிய மாற்றும் இளைய தலைமுறையினரை, ஒரேசேரச் சாமாளிக்க வேண்டிய 30 லிருந்து 50 வயதிற்குட்பட்ட நடுத்தர வயதினரின் பிரச்சனையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்.

English

Men and especially women in their middle years who have the major caregiving responsibilities for their children and parents. This generation is growing dramatically because of the prolonged life spans of older people who tend to need increasing care and because of the trend among younger people to stay with their parents longer.