sarcoma
சதைப்புற்று, நார்திசுக்கட்டி, கழலை, தீவிரப் புற்றுநோய்
தமிழ் விளக்கம்
நான்கு வகையான புற்று நோயில் ஒரு வகை - மற்ற மூன்று வகை தளச்செல் புற்று அல்லது புறச்சருமப்புற்று, இரத்தப் புற்று, நினநீர் நாளப்புற்று (carcinoma, leukemia, and lymphoma). இது எலும்புகள் கொழுப்பு மற்றும் குருத்தெலும்புகளில் உருவாகும் புற்றுநோய்.
பார்க்க: Cancer - புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப் பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளத் தேவையான அளவுக்குப் பல செல்களை உருவாக்குகிறது. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன அல்லது உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், கட்டியாகி Tumor எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கட்டிகளும் (கழலைகள் -Tumor) புற்று நோய்க் கட்டிகளல்ல. இக்கட்டிகள் (கழலைகள்) தீங்கில்லாக் கட்டிகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கட்டிகள் (malignant tumours) என இருவகைப்படும்.
தீங்கில்லாக் கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லாக் கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.
கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்தக் கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்றுப் பெருகும். சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.
புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாகப் புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

English
One of the four major types of cancer (including carcinoma, leukemia, and lymphoma) characterized by spread of the disease into the bones, fat, or cartilage.