Satir, Virginia (1916-1988)

சதிர், வர்ஜீனியா (1916-1988)

தமிழ் விளக்கம்

சதிர், வர்ஜீனியா (1916-1988) - அடிப்படையில் சமூகப்பணியாளரான இவர் குடும்பச் சிகிச்சைக் கல்வியாளராகவும், குடும்பச் சிகிச்சை தத்துவாசிரியராகவும் புகழ்பெற்றார். இந்தத் துறையில், குறிப்பாக குடும்பத் தொடர்பாடல் முறைகளில் புதுமையான முறைகளையும், கருத்துக்களையும் அறிமுகப்படுத்தியவர். குடும்பச் சிகிச்சை முறைகளைப் பற்றி இவர் எழுதிய ஒருங்கிணைந்த குடுமபச் சிகிச்சை (Conjoint Family Therapy) மற்றும் மக்களாக்கம் (Peoplemaking) போன்ற புத்தகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இதுதவிர குடும்பச் சிகிச்சையாளர்களுக்கும் சமூகப்பணியாளர்களுக்கும் எண்ணற்ற பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்தியுள்ளார்.
பார்க்க: ஒருங்கிணைந்த குடுமபச் சிகிச்சை (Conjoint Family Therapy) - கணவன் மனைவியையோ, குழந்தைகள் பெற்றோர்களையோ, காதலர்களையோ ஒரே அமர்வில் கலந்துகொள்ளச் செய்து, சிகிச்சையாளரோ, சிகிச்சையாளர் குழுவோ அவர்களை ஒருசேரச் சந்தித்து சிகிச்சை அளிப்பது.
Family Therapy: குடும்பச் சிகிச்சை - ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்களிடையுள்ள பரஸ்பரத் தொடர்பாடலையும், உறவாடலையும் மேம்படுத்த, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு வடிவமைக்கப்பட்ட உளவியல் சிகிச்சை முறை. இது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் தொடர்புகளைப் பரிசீலித்து, பரஸ்பர மற்றும் ஏற்றெதிர் (reciprocal obligations) கடமைகளை விளக்கி, குடும்ப உறுப்பினர்களுக்குள் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க (நிலைமைக்குத் தக்கபடி வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய), நடத்தைப் போக்குகளை ஊக்குவிக்கின்றது. பிரச்சனைக்கான பின்னணிக் காரணத்தை (குடும்ப வரலாறு) முழுக்கச் சார்ந்திராமல், உறுப்பினர்கள் சொன்னதையும், சொல்லாமல் விட்டதையும், சொல்லாமல் மறைத்தைதையும் கவனத்துடன் ஆராய்ந்து, 'இங்கே இப்பொழுது' என்ன தேவைப்படுகிறது என்பதையறிந்து செய்யப்படும் சிகிச்சை. சமூகஉளவியல், நடத்தையியல், அமைப்பியல் கண்ணோட்டங்களின்படி சிகிச்சை முறைகளும் வேறுபடுகின்றன. சில செல்வாக்குமிக்க குடும்பச் சிகிச்சையாளர்கள் சால்வடார் மினிசின் (கட்டமைப்பு குடும்பச் சிகிச்சை), ஜே ஹேலி (மூலோபாய குடும்பச் சிகிச்சை), வர்ஜினியா சதிர் மற்றும் பாலோ ஆல்டோ குழு, முர்ரே போவன், கார்ல் விட்டேகர், ஹென்றி டிக்ஸ், மாரா செல்விணி, மற்றும் பெக்கி பாப் போன்றவர்கள்

English

A major theoretician and educator in family therapy, she developed many of the innovative communications concepts of the field. She wrote the highly influential books Conjoint Family Therapy (Palo Alto, CA: Science and Behavior Books, 1964) and Peoplemaking (Palo Alto, CA: Science and Behavior Books, 1972) and led countless workshops to instruct social workers and others in the theory and practice of family therapy.