satisficing
போதுமான திருப்தி
தமிழ் விளக்கம்
Satisficing என்ற வார்த்தை satisfy மனநிறைவு, திருப்தி மற்றும் suffice போதுமானது என்ற வார்த்தைகளின் கலவை. இதை ஒரு நிர்வாகவியல் அறிவியல் சூத்திரமாக, பட்டறிவு சார் நடைமுறைக் கோட்பாடாக விளக்கியவர் ஹெர்பெர்ட் சைமன் (Herbert A. Simon) என்ற நிர்வாகவியலார். ஒன்றைத் தொடங்குவதற்கு அல்லது ஒன்றின் மீது முடிவெடுப்பதற்கு, விரிவாக வாய்ப்புகளைத் தேடி அலையாமல், தொடங்குவதற்கு எளிதான நம் முன்னுள்ள வாய்ப்புகளில் திருப்தியடைந்து அதை வைத்து முடிவெடுக்கும் பரீட்சார்த்த நடைமுறையைக் குறிக்கும் சொல். சமூகத் திட்டமிடலிலும், சமுதாயப் அமைப்புப் பணியிலும், ஒன்றிற்கு ஒன்று வேறுபட்ட விருப்பங்களைக் கொண்ட குழுக்களிடையே, சிறந்த ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்வதை விட, அனைவருக்கும் போதுமான அளவு திருப்தியளிக்கும் முடிவு எடுக்கும் நடைமுறையைக் குறிக்கும். போதுமான திருப்தி தரும் சமரச முடிவால் ஒவ்வொரு குழுவும் அதன் அடுத்த கட்ட இலக்கை நோக்கி நகர இது உதவும்.
English
A term used by social planners and community organizers to describe decision making among disparate groups in which the option chosen is a "good enough" compromise rather than the best possible choice. The compromise is made to keep the group progressing and moving incrementally toward the optimal goals.