savage inequalities
குரூரமான / கொடுமையான / சகிக்க முடியாத / காட்டுமிராண்டித்தனமான ஏற்றத்தாழ்வுகள்
தமிழ் விளக்கம்
அமெரிக்க நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில், பரந்துபட்ட இடப்பகுதியில், செல்வந்தர் வீட்டுக் குழந்தைகள் படிக்கின்ற, அதிகக் கட்டணம் வசூலித்து, அதிகச் சம்பளத்தில் திறமையான ஆசிரியர்களை பணியிலமர்த்தி, நவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள பள்ளிகளுக்கும், மத்திய தர மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் படிக்கும், நகருக்குள்ளே செயல்படும் பள்ளிகளுக்குமிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்க, கல்விமுறைச் சீர்திருத்தத்திற்காக பாடுபட்ட ஜோனாதன் கொஜல் (Jonathan Kozol) என்ற கல்வியாளர் உபயோகப்படுத்திய சொல்லாடல் மற்றும் அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு. ஏற்கனெவே பலகாரணங்களால் பின்தங்கிய குழந்தைகளுக்கு, கல்வி முறையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த ஏற்றத் தாழ்வுகள் பெரும் தடையாக அமையும் என்று எச்சரித்தார்.
English
The term education reformer Jonathan Kozol used to describe the disparity between opportunity available to students in affluent suburban schools and those in inner-city schools. He attributes this to the way American schools are funded mostly at the local level, resulting in more money for teachers, supplies, and infrastructure in affluent neighborhoods than in poor ones. The effect is that society places another obstacle before those who are already the most disadvantaged.