Save the Children Federation

குழந்தைகளைக் காக்கும் கூட்டமைப்பு, குழந்தைகளை ரட்சிக்கும் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

குழந்தைகளை இரட்சிப்போம் என்ற தொண்டு நிறுவனம், இகளாண்டைன் ஜெப் மற்றும் டோரதி பக்ஸ்டன் ஜெப் என்ற இரு சகோதரிகளால், 1919 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டு இன்று உலக அளவில் விரிவடைந்து செயல்படும் ஒரு சர்வதேச அரசுசாரா தொண்டு நிறுவனமாகும். ஏழைநாடுகள், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள குழந்தைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்கள் வாழும் சமுதாயங்களுக்கு உதவியும் நிவாரணமும் அளிக்கும் குறிக்கோளோடு செயல்படும் தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் 120 நாடுகளில் செயல்படுகிறது. இதன் அமெரிக்க அமைப்பு குழந்தைகளைக் காக்கும் கூட்டமைப்பாக 1932 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம், இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜெப் அம்மையார் வெளியிட்ட உரிமைப் பிரகடனத்தை முன்மாதிரியாகக் கொண்டேதான் வெளியிடப்பட்டது.

English

The nongovernment organization (NGO) founded in 1932 to provide social services, community development and financial assistance to communities, families, and especially children who live in impoverished nations or areas that have suffered disasters or are undergoing economic problems. Programs exist in many Third World nations, as well as in such areas in the United States as Appalachia, American Indian reservations, poor neighborhoods in inner cities, and Chicano areas.