schedule of reinforcement

வலுவூட்டல் அட்டவணை

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்ற முயற்சிகளில், விரும்பும் நடத்தையை வலுப்படுத்த, அதைத் தொடர்ந்து செய்ய வைக்க (reinforcement) வெகுமதியும், தவிர்க்க வேண்டிய நடத்தையைச் செய்யவிடாமல் தடுக்கத் தண்டனையும் கொடுத்து நடத்தைகளை வலுப்படுத்துவதுண்டு. தொடர்ந்து பாராட்டப்படுவதன் (positive reinforcement) மூலமோ, தொடர்ந்து கண்டிக்கப்படுவதன் மூலமோ (negative reinforcement) பொருத்தமான நடத்தையைப் பின்பற்றச் செய்யப்படும் முயற்சி. நடத்தைக்குப் பின் வெகுமதியோ, பாராட்டோ கிடைக்கும் போது, அந்த நடத்தை தொடரப்பட வாய்ப்புக்கள் அதிகம். இந்த வலுவூட்டும் நடைமுறை பல வழிகளில் செய்யப்படுவதுண்டு. 1. continuous reinforcement - தொடர்ச்சியான வலுவூட்டல் 2. fixed-interval schedule - இடைவெளி விட்டு வலுவூட்டல் 3.Intermittent reinforcement - அவ்வப்பொழுது ஊக்கமளித்தல். எந்தமாதிரியான வலுவூட்டல் முறைகளைக் கையாள்வது என்று திட்டமிடுதலை வலுவூட்டல் அட்டவணை என்கிறோம்.
பார்க்க: continuous reinforcement - தொடர்ச்சியான வலுவூட்டல் - நடத்தை மாற்ற முயற்சிகளில், விரும்பும் நடத்தையை வலுப்படுத்த (reinforcement) வெகுமதியும், தவிர்க்க வேண்டிய நடத்தைக்குத் தண்டனையும் கொடுத்து நடத்தைகளை வலுப்படுத்துவதுண்டு. தொடர்ந்து பாராட்டப்படுவதன் (positive reinforcement) மூலமோ, தொடர்ந்து கண்டிப்பதன் மூலமோ (negative reinforcement) பொருத்தமான நடத்தையைப் பின்பற்றச் செய்யப்படும் முயற்சியை வலுவூட்டல் என்பர்.
fixed-interval schedule - இடைவெளி விட்டு வலுவூட்டல் - நடத்தை மாற்றச் சிகிச்சையில் கையாளப்படும் உத்தி. விரும்பத்தக்க நடத்தை வெளிப்பட்டபின் அந்த நடத்தையை வலுவூட்டக் கொடுக்கப்படும் வெகுமதியைச் சற்று இடைவெளிவிட்டு வழங்குதல். உதாரணமாக வாரக் கடைசியில் சம்பளப்பட்டுவாடா செய்யும் நடைமுறை, பணியாளர்கள் வாரம் முழுதும் தொடர்ந்து பணிக்கு வரவும், அக்கறையுடன் பணி செய்யும் நடத்தையை அந்த வாரம் முழுதும் தூண்டிக்கொண்டிருக்கும்.
Intermittent reinforcement - அவ்வப்பொழுது ஊக்கமளித்தல், அவ்வப்பொழுது உற்சாகப்படுத்துதல் - நடத்தை மாற்றச் சிகிச்சை முறைகளில், ஒரு நடத்தையை நிலைநிறுத்த, விரும்பிய நடத்தை வெளிப்படும்போது அதைப் பாராட்டியோ, வெகுமதி அளித்தோ உற்சாகப்படுத்துவதுண்டு. இதை சம்பிரதாயமாக்காமல், தொடர்ந்து செய்யாமல், அவ்வப்பொழுது பொருத்தமான இடத்தில் பொருத்தமான நேரத்தில் செய்யும் முறையை அவ்வப்பொழுது ஊக்கமளித்தல் என்கிறோம்.

English

In behavior modification, a plan determining when the subject will be reinforced. This may occur at regular intervals or according to the number and type of responses the subject makes. See also reinforcement.