schizoid
மனப்பிளவு, மனச்சிதைவு போன்ற (schizo(phrenia) + eidos, resemblance)
தமிழ் விளக்கம்
யாருடனும் ஒட்டுறவில்லாமல் தனித்திருப்பது, சமூகத்திலிருந்து விலகியிருப்பது, பிறரிடம் பாராமுகமாக இருப்பது போன்ற சுபாவங்கள். இந்த சுபாவங்கள் உள இயல்பாகி, நிரந்தரமாகத் தொடரும் போது அது மனப் பிளவு ஆளுமைச் சீர்கேடாக அறியப்படுகிறது. இந்த அறிகுறிகள் 18 வயதிற்குக் கீழுள்ளவர்களுக்கு தென்படும்போது அதைச் சிறுபிராய மனப்பிளவுச் சீர்கேடு என்றழைக்கின்றனர்.
பார்க்க: personality disorder - ஆளுமைக்கோளாறு - ஆளுமைக்கோளாறு என்பது, ஒருவருக்கு மற்றவர்களோடும், சூழ்நிலையோடும் தொடர்பு கொள்வதிலும், புரிந்து கொள்வதிலும் ஏற்படும் இணக்கமின்மையால் ஏற்படும் செயழிலந்த நிலை. இந்த ஆளுமைச் சிக்கல்கள், அதன் காரணம் மற்றும் விளைவுகளைக் கொண்டு பதினோரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன 1. சந்தேக ஆளுமை (Paranoid personality disorder) , 2. மனப்பிளவு ஆளுமை (Schizoid personality disorder), 3. மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder), 4. சமூகவிரோத ஆளுமை (Antisocial personality disorder), 5. ஸ்திரமற்ற ஆளுமை (Borderline personality disorder), 6. நாடகப்பங்கான ஆளுமை (Histrionic personality disorder), 7. தற்பூசனை (தற்காதல்) ஆளுமை (Narcissistic personality disorder), 8. தவிர்க்கும் ஆளுமை (Avoidant personality disorder), 9. சார்ந்திருக்கும் ஆளுமை (Dependent personality disorder), 10. அலைபாயும் ஆளுமை (Obsessive-compulsive personality disorder), 11. நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம் (Personality change due to another medical condition), 12. மேற்சொன்ன எந்த வகையிலும் சேராத ஆளுமை (Personality disorder not otherwise specified) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

English
A term applied to personality traits that include aloofness, social withdrawal, and indifference to others. If such traits seem deeply ingrained and relatively permanent, the individual might be diagnosed as having schizoid personality disorder. If the person has these traits and is younger than 18, the diagnosis might be schizoid disorder of childhood or adolescence.