schizoid personality disorder

மனப்பிளவு ஆளுமைக் கோளாறு

தமிழ் விளக்கம்

யாருடனும் ஒட்டுறவில்லாமல் தனித்திருப்பது, சமூகத்திலிருந்து விலகியிருப்பது, பிறரிடம் பாராமுகமாக இருப்பது, வரையறுக்கப்பட்ட அல்லது வறட்சியான உளநிலை போன்ற சுபாவங்கள். இந்த சுபாவங்கள் உள இயல்பாகி, நிரந்தரமாகத் தொடரும் போது அது மனப் பிளவு ஆளுமைச் சீர்கேடாக அறியப்படுகிறது. இவர்கள் தனியர்களாகவும், தனித்துச் செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
பார்க்க: ஆளுமைக்கோளாறு என்பது, ஒருவருக்கு மற்றவர்களோடும், சூழ்நிலையோடும் தொடர்பு கொள்வதிலும், புரிந்து கொள்வதிலும் ஏற்படும் இணக்கமின்மையால் ஏற்படும் செயழிலந்த நிலை. இந்த ஆளுமைச் சிக்கல்கள் அதன் காரணம் மற்றும் விளைவுகளைக் கொண்டு பதினோரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன 1. சந்தேக ஆளுமை (Paranoid personality disorder) , 2. மனப்பிளவு ஆளுமை (Schizoid personality disorder), 3.மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder), 4. சமூகவிரோத ஆளுமை (Antisocial personality disorder), 5. ஸ்திரமற்ற ஆளுமை (Borderline personality disorder), 6 நாடகப்பங்கான ஆளுமை (Histrionic personality disorder), 7. தற்பூசனை(தற்காதல்) ஆளுமை (Narcissistic personality disorder), 8.தவிர்க்கும் ஆளுமை (Avoidant personality disorder), 9. சார்ந்திருக்கும் ஆளுமை (Dependent personality disorder), 10. அலைபாயும் ஆளுமை (Obsessive-compulsive personality disorder), 11.நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம் (Personality change due to another medical condition), 12. மேற்சொன்ன எந்த வகையிலும் சேராத ஆளுமை (Personality disorder not otherwise specified) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

English

One of the 11 types of personality disorder, characterized by an ingrained pattern of aloofness, social withdrawal, indifference to the feelings of others, and a restricted range of emotions. Often described as "loners", people with this disorder usually have no close friends and choose solitary interests and occupations.