schizophrenogenic parent
மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் வாய்ப்புள்ள.
தமிழ் விளக்கம்
(Schizophren(ia) + o+ -genic) -Tending to produce or develop schizophrenia) - முரண்பாடான அல்லது ஒழுங்கு முறையற்ற கண்டிப்பு / அதிகார முறைகளைக் கையாளும் தாய்மார்களாலும், இணக்கமற்ற, ஸ்திரமற்ற நடத்தைப்பாங்குள்ள தந்தையர்களாலும் வளர்க்கப்படும் குழந்தைகள் மனச்சிதைவு நோய்க்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளதாக உளநல மருத்துவர் ப்ரீடா பிரோம்-ரெய்ச்மேன் (Frieda Fromm-Reichman) எடுத்துரைத்த, ஆனால் ஆய்வுகளால் உறுதி செய்யப்படாத வழக்கொழிந்த கோட்பாடு.
English
An obsolete concept originated by psychoanalyst Frieda Fromm-Reichman to describe a mother who is domineering and inconsistent or a father who is submissive and inconsistent in such ways as to precipitate schizophrenia in their offspring. There is little, if any, scientific evidence verifying this theory, and most experts discount it.