schizotypal personality disorder

மிகு மனப்பிளவு ஆளுமைக் கோளாறு, சித்தப் பிறழ்ச்சி ஆளுமைக் கோளாறு

தமிழ் விளக்கம்

பதினோரு வகையான ஆளுமைக்கோளாறுகளில் ஒன்று. மனச்சிதைவு நோயாளிகளுக்கே உரிய சிந்தனையில், உணர்தலில், பேச்சில் ஏற்படும் குழப்பம் அல்லது தடுமாற்றம் காணப்படும். மனச்சிதைவின் பெரும்பாலான அறிகுறிகளான, மற்றவர்களைப் போல பாவனை செய்து நடந்துகொள்வது (ideas of reference), சந்தேக உளக்கற்பனை / சந்தேக மருட்சி கொள்ளல் (paranoid ideation), மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று நம்புவது (magical thinking), நப்பாசை, வீண்கனவு காண்பது, கற்பனா இன்பம் காண்பது, பகற்கனவு காண்பது, மனக்கோட்டை கட்டுவது (strange fantasies), இயற்கைக்கு மாறுபட்ட, தனிப்போக்குடைய கோட்டித்தனமான நடத்தை (eccentric or peculiar behavior) மற்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பது (social isolation) போன்ற சுபாவங்களை இந்த ஆளுமையில் காணலாம்.
பார்க்க: ideas of reference - மற்றவர்களுடைய நடத்தையும், பிற சம்பவங்களும் மனிதர்கள் மீது தாக்கத்தை உண்டாக்குகிறது என்ற நிரூபிக்கப்படாத உண்மை. உதாரணமாக இருவேறு நபர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது தன்னைத்தான் குறிப்பிட்டுப் பேசுவதாக நினைத்துக்கொள்ளும் பிரேமை. இது தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் மருட்சியையும், மனச் சிதைவையும் பிற ஆளுமைக் கோளாறுகளையும் உருவாக்கிவிடும்).
paranoid ideation (சந்தேக உளக்கற்பனை / சந்தேக மருட்சி கொள்ளல் - தான் கண்காணிக்கப்படுவதாகவும், தன்னை யரோ தொடர்ந்து பின்பற்றுவதாகவும், தன்னைப்பற்றி பிறர் பொல்லாங்கு பேசுவதாகவும், தான் பலவிதத்திலும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் காரணமின்றி கொள்ளும் பயம். இது மற்ற மனநோய்களுக்குக் காரணமாக அமையலாம்). magical thinking என்பது செயலேதும் செய்யாமல் மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று நம்புவதற்கு ஒப்பானது. ஒன்றை பற்றி எண்ணுவதாலும், அதை மனக்கண்ணால் மீண்டும் மீண்டும் கற்பனை செய்வதாலும் அது நடந்தேறும் என்று நம்புவது.
strange fantasies (நப்பாசை, வீண்கனவு, கற்பனா இன்பம்., பகற்கனவு நிலை, மனக்கோட்டை, மாயை, கற்பனை, உருவுபடைக்குந்திறம், கனவுருப் புனைவாற்றல் - விழித்திருக்கும் போது பகற் கனவாகவோ, தூங்கும் போது கனவாகவோ, நிகழ்வுகளை, பொருட்களை அல்லது சிலவற்றை மனதால் எண்ணிப் பார்த்தல். கற்பனை செய்வதென்பது மன அழுத்ததிலிருந்து விடுபட ஆரோக்கியமான வடிகால் என்றாலும், அளவுக்கு மீறும்போது அது மனநோயின் அறிகுறியாகிவிடும்).
eccentric or peculiar behavior, இயற்கைக்கு மாறுபட்ட, தனிப்போக்குடைய கோட்டித்தனமான நடத்தை மற்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல் (social isolation).

English

One of the personality disorders in which the client shows many of the symptoms of schizophrenia, including disturbances of thought, perception, and speech, but the symptoms are not as severe. Typical but not inevitable traits are ideas of reference, paranoid ideation, magical thinking, strange fantasies, eccentric or peculiar behavior, and social isolation.