school social work

பள்ளி சமூகப்பணி

தமிழ் விளக்கம்

பள்ளி சமூகப்பணி என்பது சமூகப்பணியின் ஒரு சிறப்புத் துறை. இது, மாணவர்களின் கற்றலுக்கு, வளர்ச்சிக்கு இணக்கமான சூழலை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு பள்ளி, மாணவரின் பெற்றோர், அவர்கள் வாழும் சமுதாயம் மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும், மாணவர்களை ஆரோக்கியமாக சமூகமயமாக்கவும் முனைகின்ற முயற்சி. பள்ளிக்குச் செல்லாமல் ஊர்சுற்றுவது, யாருடனும் பழகாமல் தனித்திருப்பது, மூர்க்கத்தனமான நடத்தைப் போக்கு, யாருக்கும் கீழ்ப்படியாதிருக்கும் சுபாவம் மற்றும் உடல், உணர்வு மற்றும் பொருளாதாரக் காரணங்களால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாளவும், மாணவர்களுக்கு, குடும்பங்களுக்கு, சமுதாயத்திற்கு மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு உதவ பள்ளி சமூகப்பணியாளர்களின் உதவி நாடப்படுகிறது. பள்ளியின் நடைமுறைகளையும், எதிர்பார்ப்புகளையும் மாணவர்களின் பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் விளக்கிச் சொல்லி அதற்கேற்ப அவர்களைப் பள்ளி சமூகப்பணியாளர் பண்படுத்துவர். தங்கள் பகுதியிலுள்ள மாணவர்களின் பிரச்சனைகளைக் கையாளத்தக்க அணுகுமுறைகளை சமுதாயம் மேற்கொள்ள வழிகாட்டுவர். மாறிவரும் சமூகம் மற்றும் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ற பாடமுறைகளை மாற்றுவதற்கான முயற்சியும் மேற்கொள்வர். தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் பள்ளி சமூகப்பணியாளர் பணித்தரம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளி சமூகப்பணியாளராக பணியாற்ற, சமூகப்பணிக் கல்வியோடு, சிறப்பு பயிற்சியும், சான்றிதழும், உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
பார்க்க: வருகை தரு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகப்பணி நிபுணர்கள்.

English

The specialty in social work oriented toward helping students make satisfactory school adjustments and coordinating and influencing the efforts of the school, the family, and the community to help achieve this goal. School social workers are often called on to help students, families, and teachers deal with such problems as truancy; social withdrawal; overaggressive behavior; rebelliousness; and the effects of special physical, emotional, or economic problems. They also interpret the methods and philosophy of the school to the parents and community. In many states, school social workers are certified or licensed, with the statutes often following the NASW Standards for School Social Work Services. See also visiting teacher service and School Social Work Specialist (SSWS) credential.