school vouchers
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்விச் செலவினங்களுக்கு ஈடாகப் (தனியார் பள்ளிகளில் செலுத்தப்படும் கட்டணம்), பள்ளிச் செலவைப் பெற்றோர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூடிய பணம்
தமிழ் விளக்கம்
இந்தத் திட்டம், தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க இயலாத, வசதியற்ற பெற்றோர்களுக்கு உதவ, பொருளாதார வல்லுனர் மில்டன் ப்ரீட்மன் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான திட்டம். இத்திட்டத்தினால் வசதியான பெற்றோர்களே பயனடைவர் என்றும், இது அரசு உதவி பெரும் பள்ளிகளைப் பாதிக்குமென்றும், அரசின் மறைமுக உதவியால் தனியார் பள்ளிகள் மேலும் செல்வாக்குபெறும் என்றும் கண்டனதிற்குள்ளாகியது.
English
Redeemable notes paid by governments to parents who spend money on approved educational services. The controversial plan, popularized by economist Milton Friedman, supposedly would enable parents who could not otherwise afford it to enroll their children in private schools. Opponents call this "welfare for the rich" and suggest that it might further damage public schools, especially those in underfunded inner cities. See also "savage inequalities".