scientific method

அறிவியல் முறை

தமிழ் விளக்கம்

அறிவியல் என்பது ஒன்றை அறியும் இயல். அது ஏன், எதனால், எப்படி, ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிந்துகொள்ள உதவுவது. அறிவியல் வழிமுறை என்பது ஒன்றின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவைப் பெற, பெற்ற அறிவைத் திருத்த, மேம்படுத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் வழிமுறைகள் அல்லது நுணுக்கங்களின் (techniques) தொகுப்பாகும். உண்மைகளைத் தேடவும், தேடியடைந்த உண்மைகளை விளக்கவும் கையாளப்படும் துல்லியமான செயல்முறை அல்லது நடைமுறையே அறிவியல் முறை எனப்படுகிறது. ஒரு நடைமுறை, அறிவியல் முறை என்று கருதப்பட, அது பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். அது முன்கூட்டியே அவதானிக்கப்படக்கூடியதாகவும், அது அனுபவத்தால், பரிசோதனையால், ஆதாரங்களின் அடிப்படையில் அறியப்படக்கூடியதாகவும், அந்த ஆதாரங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும், பகுத்தறிவாய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். அறிவியல் முறை, பல நிலைகளைக் கொண்டவை. அறிய வேண்டிய உண்மையை அல்லது பிரச்னையை வரையறை செய்தல், பிரச்சனைகளை அறிய எந்த மாதிரியான முறைகள் கையாளப்படவிருக்கின்றன என்பதை முன்கூட்டியே தீர்மானித்தல், அந்தப் பிரச்சனை பற்றிய அனுமானங்களை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்பதை முன்கூட்டியே தீர்மானித்தல், அந்த ஆதாரங்களைப் பெற, ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நம்பகத்தன்மை கொண்டதுமான நடைமுறைகளைப் பயன்படுத்துதல், அதற்காகப் பிரச்சனையோடு தொடர்புடைய எல்லாவற்றையுமோ அல்லது அதைப் பிரதிபலிக்கும் சில மாதிரிகளையோ ஆய்வுப் பார்வைக்கு உட்படுத்தி அளவிட்டு, அந்த முடிவுகளையும் முடிவுகளைப்பெற உதவிய நடைமுறைகளையும், பிறர் பின்பற்றத்தக்க அளவு மிக விளக்கமான முறையில் பொதுப்பார்வைக்கும், விசாரணைக்கும் வைத்து, அறிந்துகொண்ட முடிவிற்கும் அதற்கான ஆதாரங்களிற்குமான வரையறைகளை விளக்குதல் போன்ற நிலைகளை உள்ளடக்கியதாகும்.

English

A set of rigorous procedures used in social and physical research to obtain and interpret facts. The procedures include defining the problem, operationally stating in advance the method for measuring the problem, defining in advance the criteria to be used to reject hypotheses, using measuring instruments that have validity and reliability, observing and measuring all the cases or a representative sample of those cases, presenting for public scrutiny the findings and the methods used in accumulating them in such detail as to permit replication, and limiting any conclusions to those elements that are supported by the findings.