scientific philanthropy
அறிவியல்பூர்வமான மனிதாபிமானம், விஞ்ஞானபூர்வமான மனிதாபிமானம்
தமிழ் விளக்கம்
யாருக்கு எந்தமாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்பதைச் சீரான நடைமுறைகளைக் கையாண்டு தீர்மானிக்கவும், அந்த உதவிகளைப் பயனுள்ள மற்றும் திறனுள்ள வகையில் செய்து கொடுக்கவும், அதனடிப்படையில் நிதி திரட்டவும், அல்லது அந்த உதவிகளை வழங்கும் நிறுவனங்களையும் தனிநபர்களையும் ஒருங்கிணைக்கவும், 1870 முதல் 1900 வரை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இயக்கபூர்வமாக கையாளப்ட்ட சமூக அணுகுமுறை. சீரற்ற முறையில் நிதி திரட்டப்பட்டு, மனம் போன போக்கில் செய்யப்பட்ட நிதியுதவிகளுக்கு மாற்றாக, சமூகப்பணி முறையில் நட்பார்ந்த வருகையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக, உதவிகளை முறையாக வழங்கும் நடைமுறை உருவாக அறிவியல்பூர்வமான மனிதாபிமானம் உதவியது.
English
A movement and social orientation that emerged in Europe and the United States between 1870 and 1900 to use systematic procedures for determining who was in need, raising private funds, coordinating the efforts of organizations and individuals who provide help, and providing the specific type of help that would be most effective and efficient. The movement eventually helped replace the haphazard method of raising and dispersing funds and became an integral part of the creation of a social work profession from helpful volunteers and friendly visitors.