scoliosis
நெளிமுதுகு அல்லது கொடுமுதுகு
தமிழ் விளக்கம்
நெளிமுதுகு அல்லது கொடுமுதுகு எனப்படும் இப் பிறவிக்குறைபாடு மருத்துவத்துறையில் ஸ்கோலியோசிஸ் (Scoliosis) என்றழைக்கப்படுகின்றது. இது கிரேக்கச் சொல்லிருந்து உருவானது. கிரேக்க மொழியில் scolio என்றால் வளைந்த, நெளிந்த, கொடு (bent, crooked) என்றுபொருள். அதாவது மனிதரின் முதுகுத்தண்டு ஏறத்தாழ இடவலமான திசையில் 'S' அல்லது 'C' வடிவத்தில் நெளிந்து வளைந்து இருப்பதாகும். சிக்கலான முப்பரிமாண (முத்திரட்சித்) தோற்றத்தைக் கொண்டதாக இருப்பினும், புதிர்க்கதிர்கள் (X-கதிர்கள்) படத்தைக் கொண்டு பார்க்கும்போது, நெளிமுதுகு அல்லது கொடுமுதுகு (ஸ்கோலியோசிஸ்) நோயின் வெளிப்பாடால், முதுகந்தண்டு நேராக இருப்பதைக் காட்டிலும் 'S' அல்லது 'C' வடிவத்தில் வளைந்து இருப்பதைக் காணலாம். இது பிறவியிலோ, அல்லது பெருமூளை வாதம், தண்டுவடத் தசைச் செயல் இழப்பு அல்லது உடல் காயம் போன்றவற்றுடன் தொடர்புடைய நரம்புத் தசைக் கோளாறினால் ஏற்படலாம்.
பார்க்க: kyphosis - பின் கூனல், முதுகுப்புடைப்பு, கூன், தடித்த திரளை - கூனல் முதுகுள்ளவர்கள். முதுகெலும்பு வளைவதால் ஏற்படும் ஒரு குறைபாடு, எலும்புச் சிதைவு நோயினாலோ, விபத்தாலோ, தண்டுவட முள்ளெலும்புகள் ஒன்றின்மீது ஒன்று நெருக்கமாகவோ, விலகுவதாலோ தண்டுவடம் வளைய கூன் விழுகிறது,
lordosis - கீழ்நோக்கி வளைந்த முதுகு, முதுகெலும்பு முன் குழி, முன் கூனம், தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு - முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (cervical செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (thoracic - தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (lumbar - லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (sacral - சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்துள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக்கும். முதுகெலும்பில் மூன்று வகையான வளைவுகள் ஏற்படுவதுண்டு. இடுப்புப் பகுதியில் உள்ள முதுக்குத்தண்டு முன்னோக்கி வளைந்திருப்பதை முன்கூனல் (lordosis) என்றும், மார்பு பகுதி எலும்புகள் பின்நோக்கி வளைவதை பின்கூனல் (kyphosis) என்றும், முதுகுதண்டு முழுக்க பக்கவாட்டில் வளைந்திருப்பது நெளிமுதுகு (scoliosis) என்றும் அழைக்கப்படுகிறது.

English
Sideways curvature in the back. See also kyphosis and lordosis.