scurvy

ஸ்கர்வி

தமிழ் விளக்கம்

வைட்டமின் சி குறைபாட்டினால் விளையும் ஸ்கர்வி ஒரு உயிர்ச்சத்துக் குறைநோயாகும். ஸ்கர்வியினால் லிவெர் ஸ்பாட்ஸ் நோய் (liver spots on the skin) இளகிய ஈறுகள் (spongy gums) மற்றும் எல்லா மியூகஸ் மென்படலங்களிலிருந்தும் இரத்தம் வெளிவருதல் போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இந்தப் புள்ளிகள் தொடைகளிலும் கால்களிலும் அதிகமாகக் காணப்படும். மேலும் இந்தக் குறைபாடுள்ள நபர் வெளிரிய நிறத்திலும் மன அழுத்தமுடையவராகவும் ஓரளவு மனம் உறைந்த நிலையிலும் காணப்படுவர். தீவிர ஸ்கர்வியில் திறந்த சீழ்வடியும் புண்கள் மற்றும் பற்கள் விழுதல் மற்றும் இறப்பு ஆகியவை ஏற்படலாம். மனித உடலானது குறிப்பிட்ட அளவு வைட்டமின் சி-யை மட்டுமே சேமிக்க முடியும். இதனால் புதிதாக வைட்டமின் C எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கும்பட்சத்தில் உடலானது அதைப் பயன்படுத்தித் தீர்த்துவிடும்போது இக்குறைபாடு தோன்றும்.

English

A disease caused by vitamin C deficiency resulting in such symptoms as anemia, weakness, bleeding in the mucous membranes, and spongy gums. See also nutrition and malnutrition.