SDAT

முதிய வயதில் ஏற்படும் ஞாபக மறதி அல்சைமர் வகை

தமிழ் விளக்கம்

ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயைக் கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் என அழைக்கப்படுகிறது. அல்சைமர் வியாதி உளவியல் குறைபாட்டினாலோ, மூளையில் ஏற்படும் காயத்தினாலோ, அல்லது சிறிது சிறிதாக வளரக்கூடியதாகவோ இருக்கலாம்; பொதுவாக, அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் மரபு ரீதியாக இந்நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். மூளையின் பக்கவாட்டுப் பகுதி பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணுக் குறைபாடு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. மரபணுக் குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டுப் பகுதியிலுள்ள, ரசாயனப் பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. குறைந்த படிப்பு படித்தவர்கள், அதிகக் குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஞாபக மறதி அல்சைமர் நோயை, 1. முழுமையாகக் குணப்படுத்தக் கூடியது, 2. குணப்படுத்த முடியாதது என, இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வைட்டமின் பி சத்து குறைவு காரணமாக வரும் ஞாபக மறதி நோய், முழுமையாகக் குணப்படுத்தக் கூடியது. இருப்பினும், அல்சைமர் மறதி நோயை, முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது.
அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் - ஞாபக மறதி (பெயரை மறப்பது, பொருளைத் தொலைப்பது, வார்த்தைகளைக் கண்டுபிடிக்கத் திணறுவது), யோசிப்பதில் திணறுவது, செயல்பாடுகளில் கஷ்டப்படுவது, மோசமாக மதிப்பீடு செய்வது மற்றும் முடிவு எடுப்பது, நேரம், தேதி மற்றும் இடத்தின் திசையமைவை இழப்பது, தொடர்பாற்றலில் பிரச்சனை, ஆளுமையில் மாற்றங்கள், குணங்களில் மாற்றங்கள், பிரமைகள் மற்றும் மாயத்தோற்றங்கள் போன்றவை.
இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ள பாதிப்புகள் குறித்து, இன்னும் நம் நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அல்சைமர் நோய் பற்றியும் அதிக விழிப்புணர்வு இல்லை.

English

Senile dementia of the Alzheimer's type. See also Alzheimer's disease.