seasonal unemployment
பருவகால வேலையின்மை
தமிழ் விளக்கம்
நான்கு வகையான வேலையின்மையில் ஒருவகை. பருவநிலை மாற்றத்தால் சில செயல்களைச் செய்யமுடியாது போனாலோ அல்லது சில வேலைகளுக்குத் தேவையில்லாது போனாலோ இந்த வேலையின்மை உருவாகும். கோடைகாலத்தில் விவசாயக் கூலிகளுக்கு வேலை குறைவாகவும், மழைக்காலத்தில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலை குறைவாகவும் இருக்கும். பருவகால வேலையின்மை என்பது முன் கணிக்கக்கூடியதாக இருப்பதால், சரியான திட்டமிடல் மூலமாக அதை எளிதில் கையாளமுடியும். மற்ற மூன்று வகை வேலையின்மைகளாவன 1. காலச் சுழற்சி வேலையின்மை, (cyclical) 3. பொருளாதார மந்தத்தால் / பொருளாதார அமைப்பால் வரும் வேலையின்மை (Structural) 4. பிறழ்ச்சி வேலைவாய்ப்பின்மை - ஒரு தொழிலாளி ஒருவேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போது ஏற்படும் (Friction - ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது ஏற்படும் எதிர்ப்பு / உராய்வு / காலதாமதம்) பிறழ்ச்சி வேலையின்மை எனப்படுகிறது.
English
One of the four types of unemployment (including structural unemployment, cyclical unemployment, and frictional unemployment). This type is related to regular changes in the weather or season. For example, farm workers, lifeguards, snow removal workers, and some construction workers cannot work at their jobs during certain predictable times of the year in certain localities.