second opinion

இரண்டாம் கருத்து அறிதல்

தமிழ் விளக்கம்

1. ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனைகளை மதிப்பிடுதலிலும், அவருக்காக இடையிட்டுப் பரிந்து பேசுவதையும், பரிந்தாதரித்து வேண்டுவதையும் செழுமையாக்க ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்முறை சகாக்களுடனோ அல்லது நிபுணர்களுடனோ கலந்தாலோசனை செய்வது. 2. ஒரு வாடிக்கையாளரோ அல்லது நோயாளியோ தன்னுடைய பிரச்சனை பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திறத்தொழிலினரின் கருத்தை அறிய முயலும் செயல். இரண்டாம் கருத்தை அறிந்துகொள்ள்ள வாடிக்கையாளருக்கு / நோயாளிக்கு உரிமையுண்டு. ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டாலோ, செயலிழைப்பை உண்டாக்கக்கூடிய ஆபத்தான நோயறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டாலோ, சிகிச்சைக்குப் பின்னும் பழைய அறிகுறிகள் தொடரும்போது, அது சரியாக விளக்கப்படாமலிருந்தாலோ, சிக்கலான, செலவுமிக்க நோயறிமுறைகள் தேவையற்று பரிந்துரைக்கப்பட்டாலோ, மருத்துவர் மீது நோயாளிக்கு போதுமான நம்பிக்கை ஏற்படாவிட்டாலோ ஒரு நோயாளி இரண்டாம் கருத்தைப் பெறுவதென்பது இயல்பாக நடைபெறவேண்டுமென்று அமெரிக்க மருத்துவக் கழகம் பரிந்துரைக்கின்றது. நோயாளியைப் போன்றே சமூகப்பணி வாடிக்கையாளரும் சமூகப்பணியின் தன்மை பற்றி இரண்டாம் கருத்தைப் பெற உரிமையுண்டு.

English

1. Consultation about a client by a professional with one or more colleagues and specialists to enhance the assessment and intervention process. 2. The process by which a client or patient seeks information from one or more other professionals. Clients and patients have the right to ask for second-opinion referrals. In health care, according to the American Medical Association, second opinions should be sought whenever surgery is proposed, the diagnosis is of a potentially fatal or disabling disease, symptoms persist unrelieved without explanation, risks and benefits of proposed procedures are not satisfactorily explained, diagnostic procedures seem unnecessarily complex or expensive, or the patient lacks confidence in the doctor. Clients of social workers could use similar criteria in deciding whether to seek second opinions about social work services.