secondary care

இரண்டாம் நிலைக் கவனிப்பு

தமிழ் விளக்கம்

நோயாளிகளுக்கு பல்வேறு நிலைகளில் சிகிச்சை அளிக்கபடுகிறது. மருத்துவத்துறையில் நோயாளியை முதலில் கவனிக்கும் மருத்துவரையோ, மருத்துவமனையையோ முதல்நிலைக் கவனிப்பாளர் எனலாம். இது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவாகவோ, வெளிநோயாளிப் பிரிவாகவோ அல்லது மருத்துவரின் ஆலோசனை அறையாகவோ இருக்கலாம். முதல்நிலைக் கவனிப்பில் நோயறிதல், நோய்க்குறிகளைக் கண்காணித்தல், சிறு காயங்களுக்குச் சிகிச்சை, நாட்பட்ட நோய்களுக்கு வெளிநோயாளியாக தொடர் சிகிச்சை பெறல் போன்ற சேவைகள் கிடைக்கும். முதல் நிலை மருத்துவச் சேவையை, மருத்துவர்கள், உடலியக்க சிகிச்சையாளர்கள் (physiotherapist), செவிலியர், மருந்தாளுனர் போன்றவர்கள் வழங்குவர். இரண்டாம் நிலை மருத்துவ சேவை (secondary care) என்பது, முதல் நிலையில் மருத்துவ உதவியளிப்பவர்களின் பரிந்துரையின் பேரில் நோயாளியைக் கவனிக்கும் சிறப்பு மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும், மருத்துவப் படங்கள் மூலம் நோயறிதலையும் குறிக்கும். மூன்றாம் நிலைக் கவனிப்பு (Tertiary care) என்பது அறுவைச் சிகிச்சைகள் உள்ளடக்கிய மருத்துவ மனையில் உள்நோயாளிகளாகத் தங்கிச் சிகிச்சை பெருவதையும், நான்காம் நிலை மருத்துவக் கவனிப்பு (quaternary care) என்பது பரிசோதனை முறையில், ஆய்விற்காகக் கொடுக்கப்படும் மருத்துவக் கவனிப்பைக் குறிக்கும்.

English

In the system for delivery of health care, the type of intervention provided by specialists, usually in community hospitals, including obstetrics and gynecology, dermatology, and cardiology. See also primary care and tertiary care.