secondary gain
இரண்டாம் நிலை ஆதாயம்
தமிழ் விளக்கம்
நோய்வாய்ப்படுவதால் நோயாளிக்கு அசௌகரியங்களும், சில ஆதாயங்களும், உண்டாகின்றன. நோயுற்றவர் உளப் பாதுகாப்பு முறைகளைப் (defense mechanisms) பயன்படுத்துவதன் மூலமும், உளவியல் கோளாறுகளை உடலுபாதைகளாக (conversion disorder) மாற்றிக்கொள்வதன் மூலம், மன அழுத்தம், குற்ற உணர்வு மற்றும் விரும்பத்தகாத உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவது. இதனால் ஒரு நோயாளி தனக்குள்ளே பெரும் சுகத்தை முதல் நிலை ஆதாயம் என்பர். இரண்டாம் நிலை ஆதாயம் என்பது நோய்வாய்ப்படுவதால் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் பச்சாதாபம் கவனிப்பு, சலுகைகள், மற்றும் விரும்பத்தகாத பொறுப்புகளிலிருந்து விடுதலை பெறுவது போன்றவை. மூன்றாம் நிலை ஆதாயம் (tertiary gain) என்பது நோயுற்றவர்களைத் தவிர நோயாளிகளைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டு போன்றவை. .
பார்க்க: malingering - செயற்கையாக நோய்க்குறிகள் வெளிப்படுத்தும் சீர்கேடு, போலி நோய்க்குறிகள், மனநோய் இருப்பது போல பாசாங்கு செய்தல் factitious disorder - செய்ற்கையாக நோய்க்குறிகள் வெளிப்படுத்தும் சீர்கேடு, போலி நோய்க்குறிகள், மனநோய் இருப்பது போல பாசாங்கு செய்தல்.

English
The advantages or benefits one derives from a physical or mental illness, such as attention, freedom from responsibility, and disability benefits. See also primary gain, tertiary gain, malingering, and factitious disorder.