secondary process thinking

இரண்டாம் நிலைச் சிந்தனை / எதார்த்த சிந்தனை / பக்குவப்பட்ட சிந்தனை

தமிழ் விளக்கம்

மனிதர்களில் ஆரோக்கியமானதும் ஆரோக்கியமற்றதுமான பலவகையான சிந்தனைப் பாங்கை உளப்பகுப்பாய்வாளர்கள் விளக்குகின்றனர். அவையாவன 1.மதி இறுக்க சிந்தனை (autistic thinking) 2. விமர்சனச் சிந்தனை (critical thinking) 3. சுய, தன்மகிழ்வெண்ணச் சிந்தனை (dereistic thinking) 4. மாயச் சிந்தனை (magical thinking) 5. முதன்மைச் செயல்முறைச் சிந்தனை / பக்குவப்படாத சிந்தனை (primary process thinking) 6. இரண்டாம் நிலைச் சிந்தனை / எதார்த்த சிந்தனை (secondary process thinking). முதனிலைச் சிந்தனை என்பதை உணர்வு உந்தலால் (id), இன்பமடைதலை குறிக்கோளாகக் (pleasure principal) கொண்ட, புறஉலக மதிப்பீடுகளைக் கவனத்தில் கொள்ளாத, ஆழ்மன இச்சைகளினால் உருவாகி, நனவு மனத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்படாமல் வெளிப்படும் சிந்தனை என்பர். இது மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டவர்களின் சிந்தனை போன்றும் மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் உளறல்களுக்கு ஒப்பானதும் போன்றது. இதற்கு மாறான இரண்டாம் நிலைச் சிந்தனை என்பது தருக்கரீதியான, சட்டத்திற்கு உட்பட்ட, புறஉலக மதிப்பீடுகளுக்குக் கட்டுப்பட்ட அல்லது பக்குவப்பட்ட சிந்தனை ஆகும்.

English

In psychoanalytic theory, the type of thinking that occurs in the conscious part of the ego. It is the refined, culturally influenced, environmentally responsive pattern of thought.