sectarian relief organizations
மதநம்பிக்கை சார்ந்த நிவாரண அமைப்புகள், குறுங்குழுவாத நிவாரண அமைப்புக்கள்
தமிழ் விளக்கம்
sectarian என்ற வார்த்தை சமய உட்பிரிவை, குறுங்குழுக்களைக் குறித்தாலும், இங்கே போர் மற்றும் கலவரக் காலத்தில், பஞ்ச காலத்தில், இயற்கைப் பேரழிவுக் காலத்தில், பொருளாதாரப் பிரச்சனைகளின் போது, அரசியல் காரணங்களுக்காக துன்புறுத்தப்படும்போது வேற்றுமை பாராட்டாமல், தனி மனிதர்கள், சமுதாயங்கள் மற்றும் குழுக்களுக்கு உதவி செய்யவும், நிவாரணமளிக்கவும் ஏற்படுத்தப்பட்ட மதநம்பிக்கை சார்ந்த இயக்கங்களைச் இச்சொல் குறிக்கிறது. திருச்சபையின் உலக சேவை (Church World Service), கிருஸ்துவின் வருகைக்காக காத்திருப்போரின் வளர்ச்சி மற்றும் நிவாரண நிறுவனம் (Adventist Development and Relief Agency), ஆயர்களின் உலக நிவாரண நிதியம் (Bishops' Fund for World Relief), சுதந்திர சகோதரத்துவ அறக்கட்டளை (Freedom Fellowship Foundation), மற்றும் நண்பர்கள் பேரிடர் சேவை (Friends Disaster Service) போன்ற அமைப்புகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
English
Churchbased and interdenominational organizations to provide emergency and developmental assistance to individuals, communities, and groups who have become needy because of war, famine, environmental or natural disasters, economic problems, and religious and political persecution. Some of the largest of these organizations include Church World Service, Adventist Development and Relief Agency, Bishops' Fund for World Relief, Freedom Fellowship Foundation, and Friends Disaster Service.