security risk
பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
தமிழ் விளக்கம்
1. யாரொருவரின் நம்பிக்கைகள், கருத்துக்கள், தொடர்புகள் அல்லது செயல்பாடுகள், ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கோ அல்லது அரசியலமைப்பு அதிகாரத்திற்கோ அச்சுறுத்தலாக அமையும் போது, அந்த நபரையோ, அவர் தொடர்புடைய செயல்களையோ, பாதுகாப்பிற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்றே கருதப்படும். பெரும்பாலான நாடுகளில், ஜனநாயக நாடுகள் உட்பட, இதைக் குற்றமென்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவவாறு அடையாளம் காணப்பட்டவர்களை வேலை நீக்கம் செய்தும், வேறு வகையான குற்றம் சுமத்தி சிறையிலடைத்தும், அவரை வேறுவிதத்தில் இருட்டடிப்பு செய்தும் அல்லது நாடுகடத்தியும் அரசாங்கங்கள் எதிர்வினையாற்றுகின்றன. 2. இது பலதுறைகளிலும் பயன்படுத்தப்படும் சொல்லாடல். தனி மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், கணனி செயல்பாடுகளில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், மக்களுடைய பிழைப்பு ஆதாராங்களில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தேசப்பொருளாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் என்று எதிலும் நிலவும் நிலையற்ற தன்மையைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
English
One whose beliefs, statements, associations, or actions are deemed to constitute a threat to a nation's government and constitutional authority. In most nations, even so-called democracies, an individual does not have to be convicted of subversive or criminal conduct to be given such a label; nevertheless, when individuals have been so identified, they have been fired from jobs, incarcerated, interred, and deported.