sedative-use disorders
துயிலூட்டி மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், தூக்கமாத்திரை பயன்பாட்டால் ஏற்படும் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
தூக்க மாத்திரைகள், உளமயக்கிகள், பதட்டமடக்கிகள், சமானகாரிகள், மூளைக் கொதிப்பகற்றிகள் போன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகப்படுத்துபவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது சீர்கேடுகள். இந்த மருந்துகளுக்குப் பழக்கமாகும் போது, அது ஜன்னி (பிதற்றல்), நினைவு மறதி, மனப்பித்து அல்லது சித்தப்பிரமை, உணர்வுத் தடுமாற்றம், மனப்பதட்டம், புணர்ச்சிப் பிசகு அல்லது ஆண்குறி விறைப்பாக முடியா கோளாறு, தூக்கமினமை மற்றும் சமூகத்திறன் பாதிப்பு போன்ற பல்வேறு குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த மருந்துகளின் உபயோகத்தைக் குறைக்க நினைக்கும் போதோ அல்லது அதிலிருந்து விடுபட நினைத்தாலோ மிகை இயக்கக் கோளாறு, தூக்கமின்மை, கை கால் நடுக்கம், வாந்தி, மாயத்தோற்றம், மனப்பதட்டம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் உருவாகும்.
English
A class of substance-related disorders involving the use of sleeping pills, tranquilizers, anti-anxiety drugs, barbiturates, and other brain depressants. Symptoms from intoxication by these chemicals may include delirium, amnesia, psychosis, mood disorder, anxiety disorder, sexual dysfunction, sleep disorder, and significantly reduced social effectiveness. Withdrawal symptoms, resulting from cessation or reduction of use, may include hyperactivity, insomnia, hand tremor, nausea, hallucination, anxiety, or seizures.