Seebohm Report
ஃபிரடெரிக் சீபாம்
தமிழ் விளக்கம்
இங்கிலாந்து நாட்டின் ஸ்தல ஸ்தாபன அமைப்புகளின் தனிமனித மற்றும் சமூகநல சேவைகளின் அமலாக்கத்தைப் பரிசீலனை செய்ய, பிரிட்டிஷ் தேசிய சமூகப்பணி கல்லூரியின் பயிற்சித் துறைத் தலைவராக இருந்த ஃபிரடெரிக் சீபாம் என்பவரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் அறிக்கை சமூக நலச் செயல்பாடுகளை, தனித்தனியாக செயல்பட்ட மருத்துவ வசதி, குழந்தைகள் நலம், முதியோர் நலம், ஊனமுற்றோர் நலம் போன்ற பல செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பரிந்துரைத்து, அதில் சமூகப்பணியாளர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. சமூகப்பணி எத்தகைய பொறுப்புகளை எடுக்கவேண்டும் அதற்கு என்னென்ன மாற்றங்களுக்கு சமூகப்பணி உள்ளாகவேண்டும் என்றும் கூறியது. இங்கிலாந்து நாட்டின் சமூக நலச் செயல்பாட்டில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படும் இந்த அறிக்கையைப் (1968) பின்தொடர்ந்து, ஸ்தல ஸ்தாபன அமைப்புகளின் சமூக சேவை பொறுப்புகள் என்ற சட்டம் 1970 ல் இயற்றப்பட்டது.
English
The 1968 study conducted for the British Home Office by Frederic Seebohm (leader of the British National Institute for Social Work Training). Officially titled The Report of the Committee on Local Authority and Allied Personnel Social Services, the document analyzed the structures of local social services departments and recommended ways to improve their efficiency. The report led to a unification of the social services in Great Britain.