segregation

ஒதுக்குதல், பிரித்து வைத்தல், தனிமைப்படுத்தல்

தமிழ் விளக்கம்

தனிநபர்களையோ குழுவையோ, சமூகத் தடைகள், சம்பிரதாயங்கள் மூலமாகவோ, சட்டப்படியோ அல்லது சரியிணையானவர்களின் நிர்பந்தத்தின் பேரிலோ, அல்லது தனிப்பட்ட விருப்பத்தினடிப்படையிலோ பிரித்தும், தனிமைப்படுத்தியும் வைத்திருப்பது. சில நேரங்களில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் மட்டும் இணைந்திருக்க சுய விருப்பத்தின் பேரில் பிரிந்திருப்பதும் வழக்கம். நிர்பந்தத்தின் பேரில் தனிமைப்படுத்தப்படுவதென்பது, மேலாதிக்கக் குழுவினரால், அதிகாரமற்ற குழுக்களை தங்கள் விருப்பப்படி நடக்க வைக்க, சட்டரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ, குறைந்த பட்ச நெறிகளைக் கடைப்பிடித்து குறித்த நிலைக்கு வரக் கொண்டுவரப்படும் தடைகளாகவோ இருக்கலாம்.
பார்க்க: Plessy v. Ferguson (பிளஸ்ஸி Vs - பெர்குசன் வழக்கு - பொதுப்போக்குவரத்து முறைகளில் இனரீதியாக ஒதுக்கி வைக்கும் முறையை நியாயமென்றும் அரசியல் சாசனச் சட்டப்படி செல்லத்தக்கதென்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. எங்கெங்கு சமமான இணையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இனரீதியாக ஒதுக்கி வைக்கலாம் என்ற இந்தத் தீர்ப்பினால் பல இடங்களிலும் இனரீதியான பாரபட்சம் சட்டபூர்வமாகியது. இந்தச் சட்டம் 1954 ஆம் ஆண்டு வந்த பிரவுன் Vs கல்வித்துறை வழக்கின் போது முடிவுக்கு வந்தது.
apartheid - இனத்தை ஒதுக்கி வைத்தல், தீண்டாமை, இன வெறி - 1994 வரை தென்னாப்ரிக்கா அரசாங்கம், கல்வி, மருத்துவ வசதிகள், வாக்குரிமை, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, நிலப்பங்கீடு போன்றவற்றில் வெள்ளையர்களுக்கும், கருப்பினத்தவர்களுக்ம் இனரீதியில் பாகுபாடான, சமமற்ற முறையில் சலுகைகள் வழங்கிய நடைமுறை),
discrimination - தனித்து உணரல், பாகுபாடு, வேற்றுமை உணர்வு, பிரித்தறிதல், வித்தியாசப்படுத்துதல், வேறுபடுத்தல், ஒருசார்பாய் இருத்தல், ஓரங்காட்டல் - 1. மக்களை இனம், பாலினம், மதம், கலாச்சாரம் போன்ற வெளிப்படையான அடையாளங்களை வைத்து தவறாகக் கணிப்பதும், அதனடிப்படையில் அவர்களை வெறுப்புடன் நடத்தும் செய்கையை பாகுபாடு காட்டுவது என்பர் 2. பொதுவாக இருவேறு பொருட்களை, கருத்துக்களை, சூழ்நிலைகளை, தூண்டல்களை வேறுபடுத்தி (வியவகார ஞானம்) இனம் காணுவதென்றும் பொருள்படும்.
separatism

English

The separation or isolation of a group through social sanctions, laws, peer pressure, or personal preference. Voluntary segregation occurs when people choose to associate with others like them. Involuntary segregation occurs when legal, political, or normative requirements, usually established by a dominant group, are imposed on the members of a less powerful group. See also Plessy v. Ferguson, apartheid, separatism, and discrimination.