selective amnesia
தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி
தமிழ் விளக்கம்
பலவகையான ஞாபக மறதியில் ஒருவகை. குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த நினைவுகளை மறந்துவிடுதல். அரசியல் அல்லது பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களின் தர்மசங்கடமான பழைய சம்பவங்களை மறந்து விடுவது அல்லது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவதை இச்சொல்லால் குறிப்பர்.
பார்க்க: psychogenic amnesia - உளமரபு மறதி என்பது பொதுவான மறதிக் கோளாறு போலல்லாமல் ஒரு வகையான பின்னடைவு மறதிக் கோளாறு. வாழ்க்கையின் கசப்பான சம்பவங்களை மறப்பது -- தாங்கிக் கொள்ளமுடியாத மன அழுத்தத்தால் தன்னிலை மறக்கும் தொடர்பறு சீர்கேட்டில் (dissociative disorder) ஒரு வகை. இது மருத்துவக் காரணத்தாலோ, போதை மருந்துப் பழக்கத்தாலோ (cannabis organic mental disorder), வயதாவதால் ஏற்படும் அறிதிறன் குறைபாட்டாலோ ஏற்படுவதல்ல. இந்த வகையான நினைவிழப்புத் தடங்கல்களில் பல வகையுண்டு. 1. குறிப்பிட்ட காலம் சார்ந்த மறதி (localized amnesia), 2. குறிப்பிட்ட சம்பவங்களை மறத்தல் (selective amnesia), 3. குறிப்பிட்ட காலத்திற்குப் பிந்தைய சம்பவங்களை மறக்கும் தொடர் மறதி (continuous amnesia), 4. தனிப்பட்ட வாழ்வனுபவங்களை மறக்கும் பொதுவான மறதி (generalized amnesia). இது கடந்த காலத்தில் உளமரபு மறதி என்ற சொல்லால் குறிக்கப்பட்டது.
பார்க்க: தொடர்புடைய சொற்கள்
1.dissociative disorder - தொடர்பறு சீர்கேடு, ஞாபக சக்தி / நினைவாற்றல் இழப்பு, விழிப்பு நிலை (உணர்வு, அறிவுடை நிலை, நனவு நிலை) இழத்தல், அடையாளம் (தனித்துவம்) இழத்தல், புலன் உணர்வு (அறியாற்றல்) இழத்தல் போன்றவற்றில் ஏற்படும் தடங்கல்கள் அல்லது செயலிழப்பு போன்ற நிலைமைகளை உள்ளடக்கியது.
2.dissociative fugue - தாங்கிக் கொள்ளமுடியாத, உள்ளிருந்தும் மற்றும் வெளியிலிருந்தும் உருவாகும் மன அழுத்தத்தால் தங்களுடைய குடும்பம், வேலை மற்றும் சுற்றுப்புறத்தை மறத்தல்.

English
See psychogenic amnesia.