selective attention
ஒருமுகப்பட்ட கவனம், விருப்பமானவற்றில் கவனம் குவித்தல்
தமிழ் விளக்கம்
தேவையற்ற விசயங்களை உதாசீனப்படுத்தி விட்டு, தனக்குத் தேவையான தகவல்களில் மட்டும் கவனத்தைக் குவிப்பது. அனுபவமிக்க சமூகப்பணியாளர்கள், தங்கள் வாடிக்கையாளருடன் உரையாடும் போது, பிரச்சனை தொடர்பாக வாடிக்கையாளர் தெரிவிக்கும் முக்கியமான தகவல்களில் மட்டும் கவனம் செலுத்துவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
பார்க்க; centration - ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் கவனம் செலுத்த இயலாமை, ஒற்றை அவதானம் - பியாஜியோவின் அறிவாற்றல் வளர்ச்சிக் கோட்பாட்டின்படி 4-7 வயதுக் குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் கவனம் செலுத்த இயலாமை. சமமான முக்கியத்துவம் தரவேண்டிய பொருளோ, நிகழ்வோ, மனிதர்களோ இருந்தாலும் ஏதாவது ஒன்றைத் தவிர பிறவற்றின் மேல் கவனம் செலுத்த இயலாமை அல்லது விருப்பமின்மை.

English
Concentration focused on information, situations, or the like while ignoring other stimuli. Skilled social work interviewers use selective attention so they can attend to only the most significant information out of all the material that a client presents. See also centration and decenter.