selective mutism

தெரிந்தே பேச இயலாமை, மௌனமாயிருத்தல்

தமிழ் விளக்கம்

நன்றாகப் பேசத்தெரிந்தும் கூச்சத்தினாலோ, பதட்டத்தாலோ பேசாமலிருத்தல். இயல்பாகப் பேசக்கூடிய மனிதரோ அல்லது குழந்தையோ, மனப் பதட்டத்தினாலோ, கூச்சத்தாலோ பேசவேண்டிய இடங்களில் பேசாமலிருக்கும் நிலை. பள்ளிக் குழந்தைகள் இந்த மாதிரி பேசாமலிருப்பது, ஆசிரியர்களிடம் வெறுப்பும் சலிப்பும் ஏற்படுத்தி, அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமளவிற்கும், சகமாணவர்கள் கேலி செய்யுமளவிற்கும் பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

English

A childhood disorder, formerly called elective mutism, characterized by the refusal to talk in social situations where talking is expected, for at least one month and to the extent that it interferes with educational or occupational achievement. An individual with selective mutism does not lack knowledge of the language or have another communication disorder.