selective programs
தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள், குறிப்பிட்ட திட்டங்கள்
தமிழ் விளக்கம்
முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரையறைகளின் படி ஒரு உதவியைப் பெறத் தகுதியானவர் என்று தேர்வுசெய்யப்பட்டவருக்கு, அவரின் குறிப்பிட்ட சூழ்நிலையையும், பொருளாதார நிலையையும், சிறப்புத் தேவைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு உதவி செய்ய வடிவமைக்கப்பட்ட திட்டங்கள். இது அனைவருக்குமான திட்டங்கள் (universal programs) மற்றும் சிலருக்காக வழங்கப்படும் விதிவிலக்கான திட்டங்களிலிருந்து (exceptional programmes) மாறுபட்டது. எடுத்துக்காட்டு: உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக உதவி (Temporary Assistance to Needy Families (TANF), மருத்துவ உதவி (Medicaid), உணவு அடையாளச் சீட்டு படிவம் (Food Stamp program).
English
Social welfare programs based on individualized assessments to determine eligibility. This occurs in programs using the means test, including Temporary Assistance to Needy Families (TANF), Medicaid, and the Food Stamp program. Selective programs are so named to distinguish them from universal programs.