self-defeating personality disorder
தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளும் ஆளுமைக்கோளாறு, வலியேற்பு வெறி சார்ந்த ஆளுமைக்கோளாறு (masochistic personality disorder), தோல்வி / துயர் / வலி விரும்பும் ஆளுமைக்கோளாறு
தமிழ் விளக்கம்
இளம்பிராயத்தில் தொடங்கி பல்வேறு விதங்களில் வெளிப்படும் தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ள, தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிற ஆளுமைக்கோளாறு. இந்த ஆளுமையுள்ளவர்கள் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பார்கள், துன்பம் தரும், தங்களை மதிக்காத உறவுகளைத் தேடிச் செல்வார்கள், மற்றவர்களின் உதவியைப் புறக்கணிப்பார்கள். செய்துமுடித்தால் தனக்கு சிறப்புவரும் என்று தெரிந்திருந்தும், அந்த வேலைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள், தேவையற்று மற்றவர்களுக்காகச் சிரமங்களை ஏற்றுக்கொண்டு சுகம் காண்பார்கள்.
English
A pervasive pattern of behavior characterized by avoidance or subversion of pleasurable experiences and attraction to situations in which suffering is a likely result. The term is synonymous with masochistic personality disorder.