self-determination

தன் முடிவுரிமை, சுயநிர்ணய உரிமை, தனிமனிதர் தற்சார்புரிமை, மக்களினத்தின் தனியாட்சிப் பண்புரிமை, மனத்தின் வகையில் கருத்து செயல் உணர்வுகளின் போக்கிற்குரிய இயன்முடிபார்ந்த பாங்கு

தமிழ் விளக்கம்

தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள், தங்களுடைய தேவைகளைப் பற்றியும், அதைத் தங்களின் வசதி வாய்ப்பிற்கேற்றவாறு பூர்த்தி செய்துகொள்ள முடிவெடுக்கும் உரிமையை அங்கீகரிப்பதென்பது சமூகப்பணியின் அடிப்படையான தொழில் நெறியாகும். எந்தெந்த மாதிரியான உதவிகள் வாடிக்கையாளருக்குக் கிடைக்குமென்பதையும், அந்த உதவிகளைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் அல்லது விளைவுகள் ஏற்படுமென்பதையும் வாடிக்கையாளரிடம் சொல்வதென்பது இந்த தொழில்நெறியின் உள்ளார்ந்த அடிப்படையாகும். வாடிக்கையாளர் சுயமாக எடுத்த முடிவை செயலாற்ற அவருக்கு உதவுவது சமூகப்பணியாளரின் கடமையாகும்.
2. எட்வர்ட் தேகி மற்றும் ரிச்சர்டு ரையன் (Edward Deci and Richard Ryan) என்ற உளவியலாளர்கள் உள்ளார்ந்த ஊக்கமுடமையின் ஒரு அங்கமாக தன்முடிவுரிமைக் கோட்பாட்டை கருதுகிறார்கள். திறனுடமை (competence), சுயச்செயல்பாடு அல்லது சுதந்திரம் (Autonomy), மற்றவர்களுடன் ஒன்றித்திருப்பது (Relatedness) போன்ற சுபாவங்களே தன்முடிவுரிமையை உள்ளார்ந்த தன்மையாக்கி அது மனிதர்களை மேலும் வளர ஊக்கமளிப்பதாகக் கருதுகிறார்கள்.

English

An ethical principle in social work that recognizes the rights and needs of clients to be free to make their own choices and decisions. Inherent in the principle is the requirement for the social worker to help the client know what the resources and choices are and what the consequences of selecting any one of them will be. Usually self-determination also includes helping the client implement the decision made. Self-determination is one of the major factors in the helping relationship.