self-disclosure

சுய வெளிப்பாடு

தமிழ் விளக்கம்

ஒருவர் தன்னைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதைப் பொதுவாக சுயவெளிப்பாடு என்று பொருள் கொள்ளலாம். சுய வெளிப்பாட்டின் தன்மை மனிதர்களைப் பொறுத்து, சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். 2. ஒரு சமூகப்பணியாளர் தன்னுடைய வாடிக்கையாளருடனான நேர்முக உரையாடலில் தன்னைப் பற்றிய தகவல்களை, தனது மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளுதல். தனிப்பட்ட தகவல்களை வாடிக்கையாளருடன் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை பற்றி சமூகப்பணியில் நெறிமுறைகள் இல்லாவிட்டாலும், சில சந்தர்ப்பங்களில் அது வாடிக்கையாளருக்கு உதவும் என்றே கருதப்படுகிறது. சமூகப்பணியாளரைப் பற்றிய தகவல்கள், வாடிக்கையாளரின் சிகிச்சைக்கு உதவுமென்றாலோ, வாடிக்கையாளரின் இலக்கை அடைய உதவுமென்று கருதப்பட்டாலோ தகவல்களைச் சொல்லலாம் என்பதில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.

English

In the social work interview, the social worker's revelation of personal information, values, and behaviors to the client. The profession does not declare that such revelation should or should not be made, and in certain limited circumstances it may be considered useful. However, there is some consensus that self-disclosure should not occur unless it serves a therapeutic purpose or is designed to help achieve the client's goal.