self-efficacy

குறிப்பிட்ட செயலைச் செய்து முடிப்பதற்கான தன்னாற்றல், சுய சித்தி, தன் வினையாற்றல்

தமிழ் விளக்கம்

தன்னை குணப்படுத்தும், தனக்கு நலமானவற்றைத் தன்னாலே செய்துகொள்ளமுடியும் என்ற ஒரு வாடிக்கையாளரின் சுயதிறன் மீதான நம்பிக்கை. கிடைக்கும் பல்வேறு ஆதாரங்களைப் பயன்படுத்தி, நேரடியான உதவிகள் மூலமோ, வாடிக்கையாளரின் வலிமையைச் சுட்டிக்காட்டுவதன் மூலமோ, வாடிக்கையாளர் செய்யவேண்டிய பணிகளை, அவர் செய்யத்தக்க வகையில் வகைப்படுத்திக் கொடுப்பதன் மூலமாகவோ வாடிக்கையாளரின் தன்னாற்றலை சமூகப்பணியாளர் மேலும் செழுமையுறச் செய்ய உதவுவார்.

English

A client's expectation and belief in his or her ability to accomplish specified tasks that are needed to reach therapeutic goals. The social worker seeks to enhance the client's belief by offering direct assistance, pointing out client strengths, breaking down the tasks into doable elements, and using all available resources.