Self-Employment Contributions Act (SECA)

சுய தொழிலில் ஈடுபட்டிருப்போர் (சமூகப் பாதுகாப்பிற்காக) செலுத்தவேண்டிய பங்குத்தொகைச் (சந்தா) சட்டம்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் சுயதொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும், சமூகப்பாதுகாப்புப் பயன்களுக்காக (ஓய்வூதியம், வாரீசுகளுக்கான நலஉதவிகள், இயலாமை மற்றும் மருத்துவக் காப்பீடு (Old Age, Survivors, Disability, and Health Insurance - OASDHI), அவர்களின் வருமானத்திலிருந்து, அரசு வரையறுத்த தொகையை தேசிய வருவாய்த்துறைக்கு செலுத்தவேண்டிய வருமான வரி அல்லது கட்டுப்பணம். இது பணிபுரியும் தொழிலாளர்கள் செலுத்தும் காப்புறுதித் தொகைக்கு இணையானது. பணிபுரிபவர்களுக்கு சந்தாத் தொகை சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடித்துக்கொள்ளப்படும். சுயதொழிலில் ஈடுபடுவோர் வருடத்திற்கு ஒருமுறை செலுத்தவேண்டும்.

English

The federal program established in 1954 that allows a self-employed person to pay a portion of income taxes to the Internal Revenue Service for social security (Old Age, Survivors, Disability, and Health Insurance [OASDHI]). It is equivalent to a worker's Federal Insurance Contributions Act (FICA) payroll tax, except that with SECA the self-employed person pays the entire tax, whereas in FICA the employer pays part.