self-employment development
சுய தொழில் மேம்பாடு / சுய வேலைவாய்ப்பு மேம்பாடு
தமிழ் விளக்கம்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சிறு தொழில், சுய தொழில் மற்றும் சிறு வியாபார வாய்ப்புகளின் மூலம், வேலையும் வருமானமும் பெற வாய்ப்பளிக்கும் அமைப்பு ரீதியாகத் திட்டமிடப்பட முயற்சிகள். மூன்றாம் உலக நாடுகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும், பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளும் சுய தொழில் வாய்ப்புகளின் மூலமாக வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமளிக்கவும், வறுமையை ஒழிக்கவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. சுய தொழில் செய்வதற்கான சட்டங்களை விரிவாக்கியும், தளர்த்தியும், பயிற்சிகள், கடனுதவி மற்றும் மானியங்கள் அளிப்பதன் மூலம் சுய வேலை மற்றும் தொழில் வாய்ப்புக்களை அதிகப்படுத்தி வருகின்றன. இருப்பினும் முனனுபவமின்மை, சுய தொழில் செய்வதில் உள்ள பல்வேறு இடைஞ்சல்கள், போதுமான முதலீடு செய்யமுடியாமை மற்றும் சமூகநலத் திட்டங்களின் செயல்பாடு, புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் உள்ள மனத்தடைகள் என பலவும் நடைமுறைச் சவால்களாக அமைந்துள்ளன. இந்தியாவிலும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (National Rural Employment Guarantee Act (NREGA), கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (Khadi and Village Industries Commission (KVIC), அமைப்புசாரா தொழில்துறை வளர்ச்சிக்கான தேசிய ஆணையம் (National Commission for Enterprises in the Unorganized Sector (NCEUS), தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவித் திட்டம், ஆஜீவிகா - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (NRLM), பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP), மத்திய வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் குழு (CEDC) போன்ற திட்டங்கள் மற்றும் அமைப்புகளின் மூலம் சுயதொழில் மேம்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
English
Planned, organized efforts to facilitate the movement of economically disadvantaged people into the workforce by empowering them to form small businesses. Governments in Third World nations, international economic organizations, and economically developed countries are establishing programs to facilitate microenterprise. This is done primarily through training, small loans, and the relaxing of ordinances against such activity. Obstacles to self-employment include lack of business skills and access to capital and also social welfare policy and psychosocial barriers.