self-fulfilling

நினைப்பது நடந்தேறுவது

தமிழ் விளக்கம்

ஒரு மனிதன் பிற மனிதனைப் பற்றியோ, சூழ்நிலையைப் பற்றியோ அல்லது சம்பவத்தைப் பற்றியோ நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ என்ன நினைக்கிறானோ, அந்த எதிர்பார்ப்பிற்கேற்ப எல்லாமும் நடந்தேறுவது. எடுத்துக்காட்டாகத் தன்னிடம் பணிபுரிபவர் தனக்கு விசுவாசமாக இல்லை, வேலையில் போதுமான அக்கறை கொள்வதில்லை என்று ஒரு முதலாளியின் எண்ணம் போலவே பணியாளரும் நடந்து கொள்வது. சமூகப்பணியிலும், ஒரு சமூகப்பணியாளர். தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக உதவி பெரும் (Temporary Assistance to Needy Families (TANF) திட்டப்பயனாளி வேலைதேடுவதில் அக்கறை காட்டமாட்டார் என்று எண்ணினால், அந்தப் பயனாளி வேலை தேடுவதைப் பற்றி ஆலோசனை கேட்கும் போது, அவருடைய கோரிக்கையை நடிப்பு என்று நினைத்து உதவ முன்வரமாட்டார். அதன் விளைவாக அந்தப் பயனாளி வேலையில்லாமல் தான் இருப்பர். அக்கறையற்ற தன்மையால் தான் அந்தப் பயனாளிக்கு வேலை கிடைக்கவில்லை என்ற சமூகப்பணியாளரின் எண்ணம் இப்படியாக ஈடேறும்.

English

prophecy An expectation one has of another person, group, or social phenomenon that influences the way that person, group, or phenomenon is subsequently perceived. For example, a social worker may view all Temporary Assistance to Needy Families (TANF) recipients as too lazy to obtain jobs and thus may ignore a TANF client's request for advice about obtaining employment.