Self Help Group

சுய உதவிக் குழு

தமிழ் விளக்கம்

சுய உதவிக் குழு பல்வேறு செயல்களில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் என்றாலும், அது பெரும்பாலும் 15-20 பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவையே இப்போது பிரதானமாக முன்னிலைப்படுத்துகிறது. இந்த கருத்தாக்கம் முதலில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களின் முன்னேற்றதிற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், குழுவாக இணைந்து சமூக நலனில் ஈடுபடும் நோக்கத்திலும் பெண்களை குறியிலக்கக் குழுக்களாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது. தொண்டு நிறுவனங்கள் மட்டும் ஈடுபட்டிருந்த இந்த அணுகுமுறை, பின்னர் அரசின் திட்டமாக வடிவெடுத்தது. தற்போது ஆண்களுக்குமான சுயஉதவிக் குழுக்களும் பரவலாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இக்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் மனமுகந்து சிறு சேமிப்பு, கடன் மற்றும் சமூக நலனில் ஈடுபடுவர். இந்தக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன்,பொ ருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகிறது. இக்குழுக்கள், பொதுவாக இந்தியாவில் செயல்பட்டாலும், ஏனைய நாடுகளில் குறிப்பாக தென் ஆசியாவிலும் தென் கிழக்காசியாவிலும் காணப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தின்படி, அந்தத் திட்டப் பணியாளர்களைக்கொண்டு, திட்டக்குறிக்கோள்களை அடையவும், அந்தத் திட்டத்தில் மக்களின் பங்கேற்பை ஊர்ஜிதப்படுத்தவும் ஏற்படுத்தப்படுகிறது

English

A self-help group (SHG) is a village-based committee usually composed of 10–20 local women or men. Self-help groups, also known as mutual help, mutual aid, or support groups, are groups of people who provide mutual support for each other. In a self-help group, the members share a common problem or common objective. A mixed group is generally not preferred. Most self-help groups are located in India, though SHGs can be found in other countries, especially in South Asia and Southeast Asia. Members make small regular savings contributions over a few months until there is enough capital in the group to begin lending. Funds may then be lent back to the members or to others in the village for any purpose. In India, many SHGs are 'linked' to banks for the delivery of micro-credit. In MGNREGP, self help groups mean the groups initiated by the program staff in order to facilitate local people participation.