self-help groups
சுய உதவிக் குழுக்கள்
தமிழ் விளக்கம்
தங்களுடைய பொதுவான தேவைகளையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்ளவும், அதைத் தங்களுக்குள் பரஸ்பரம் உதவித் தீர்த்துக் கொள்ளவும், தங்களுடைய தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான உதவிகளை எங்கிருந்து பெறலாமென்ற தகவல்களைப் பகிர்ந்துகொண்டு அதற்கான முயற்சிகளில், தன்னார்வத்துடன், பெரும்பாலும் நிபுணர்கள் வழிகாட்டுதலின்றித் தாங்களே தொடர்ந்து செய்துகொள்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கும் குழுக்களை சுய உதவிக் குழுக்கள் என்பர். ஆனால் நடைமுறையில், சுய உதவிக் குழுக்கள் என்பது பெரும்பாலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கிராம மட்டத்தில் 15-20 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் குழுக்களைக் குறிக்கும். இதே நோக்கத்துடன் ஆண்கள் குழுக்களும் செயல்படுகின்றன. இந்தக் குழுக்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகச் சுழல்நிதி, கடன், சிறுவணிகக் கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகிறது. இவை பொதுவாக இந்தியாவில் காணப்பட்டாலும் ஏனைய நாடுகளில் குறிப்பாக தென் ஆசியாவிலும் தென் கிழக்காசியாவிலும் காணபப்டுகிறது. இக்குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் மனமுவந்து சிறு சேமிப்புக் கடன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சமூக நலனிலும் அக்கறை கொண்டு செயல்படுவர்.
English
Voluntary associations of nonprofessionals who share common needs or problems and meet together for extended periods of time for the purpose of mutual support and exchange of information about activities and resources that have been found useful in problem solving. These groups usually meet without the direction of a professional.