self-help organizations
சுய உதவி அமைப்புகள் / நிறுவனங்கள்
தமிழ் விளக்கம்
ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும், அப்பிரச்சனையை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டவர்களும், பரஸ்பரம் உதவிக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட, அமைப்பு ரீதியாகச் செயல்படும் தன்னார்வ அமைப்புகள். சில அமைப்புகள் நாடு முழுவதிலும், சில அமைப்புகள் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றன. ஆல்ஹாலிக்ஸ் அனானிமஸ் Alcoholics Anonymous (AA), பாதுகாப்பற்ற தாய்மார்களுக்கான அமைப்பு (Mothers Without Custody), போதைப் பொருள் பழக்கதிலிருந்து மீள நினைப்பவர்களுக்கான அமைப்பு / போதை அநாமாதேயர்கள் (Narcotics Anonymous), நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு (Neurotics Anonymous), மிகை உணவு உண்ணும் அநாமதேயர்கள் (Overeaters Anonymous), குறைப்பிரசவம் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றவர்களுக்கான அமைப்பு (Parents of Premature and High-Risk Infants), துணையில்லாத பெற்றோருக்கான அமைப்பு (Parents Without Partners) (PWP), மீளலுக்கான சர்வதேச அமைப்பு (Recovery, Inc)., பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச அமைப்பு (Stroke Club International), மது தவிர்ப்புக்கான பெண்கள் அமைப்பு (Women for Sobriety) போன்று சுய உதவி முயற்சிகளுக்கு உதவப் பலவிதமான அமைப்புகள் இயங்கிவருகின்றது.
English
Formally structured organizations that provide mutual assistance for participants who share a common problem with which one or more of the participants has coped successfully. Some organizations of this type that have chapters throughout the United States and the world include Alcoholics Anonymous (AA), Al-Anon, Batterers Anonymous, Depressives Anonymous, Gamblers Anonymous, Mothers Without Custody, Narcotics Anonymous, Neurotics Anonymous, Overeaters Anonymous, Parents of Premature and High-Risk Infants, Parents Without Partners (PWP), Recovery, Inc., Stroke Club International, and Women for Sobriety.