self-hypnosis
தன்னுறக்க நிலை, சுகநித்திரை, யோகநித்திரை, அறிதுயில், மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அறிதுயில், மனஆற்றலால் தூண்டப்படும் அறிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர், தரவுதுயில், சம்மோகனம்
தமிழ் விளக்கம்
Hypnosis என்ற வார்த்தை, கிரேக்க மொழியின் ’Hypos’ (அர்த்தம் - தூக்கம்) என்ற சொல்லில் இருந்து வந்தது. இது Neuro- hypnotism (sleep of nervous system -நரம்பு மண்டலத்தின் தூக்கம்) என்ற வார்த்தையின் குறுயீட்டுச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. முதல் முதலில் ஜேம்ஸ் ப்ரைட் (James Braid -1796 -1860) என்ற நரம்பியல் மருத்துவர் ஹிப்னோஸிஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஹிப்னோஸிஸ் நிலை பற்றி நல்ல விளக்கம் என்னவென்றால், நம் மனதின் கவனத்தை, அல்லது சிந்தனையை ஒருமுகப்படுத்தி (highly focused attention -aroused concentration), பின்னர் நம் மனதிற்குத் தேவையான உச்சபட்சமான ஆலோசனை அல்லது கருத்துரை வழங்குவதாகும். ஹிப்னோஸிஸ் நிகழ்வுகளில் உடல் தளர்வு (Body relaxation), தசைதளர்வு (muscle) இவைகளும் சேர்ந்து இருக்கும்.
ஒரு நபர், ஹிப்னோஸிஸ் செய்யக்கூடிய மருத்துவர் வழியே ஹிப்னோஸிஸ் (Hypnosis) செய்யப்படுகிறார் என்றால் அது ஹெட்டிரோ-ஹிப்னோஸிஸ் (hetero hypnosis) எனப்படும். இதை ஹிப்னோதெரபி (hypnotherapy) என்றும் கூறுவர். சுயமாகத் தனக்குத் தானே தூண்டி அதன்மூலம் ஒருவர் ஹிப்னோஸிஸ் நிலைக்கு (State of Hypnosis) வந்தால், அதற்கு ஆட்டோ-ஹிப்னோஸிஸ் (autohypnosis) என்று பெயர். இதைத் தான் பெரும்பாலோர் சுய ஹிப்னோஸிஸ் (self-hypnosis) என குறிப்பிடுகின்றனர். ஹிப்னோஸிஸ் என்பது ஓர் உளவியல் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறை. இதன் முலம் உள்ளம் சார்ந்த பிரச்சனைகள் (psychological), உணர்ச்சிகள் (emotional), மற்றும் சில உடல் ரீதியான பிரச்சினைகளைக் (physical problems) குணப்படுத்தலாம். இது மனதைக் கட்டுப்படுத்தக்கூடியதும் (mind-control) இல்லை. மூளைச் சலவை (brain-washing) செய்யக்கூடியதும் இல்லை. தூக்கம் (Sleep) அல்லது விசித்திரமான மாற்றங்கள், மாயங்கள், கண்கட்டி வித்தைகள் போன்ற எந்த நிகழ்வுகளும் இதில் கிடையாது.

English
The act of placing oneself in a mental state of aroused concentration such that everything else in one's consciousness is ignored. Social workers and other psychotherapy providers sometimes use hypnotherapy and also instruct their clients in ways to self-administer hypnotic suggestion for therapeutic purposes outside the formal sessions.