self-incrimination
தானே குற்றத்தை ஒப்புக்கொள்ளல், அப்ரூவராதல்
தமிழ் விளக்கம்
ஒருவர் தான் செய்த குற்றத்தைச் சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிகளிடம் நேரடியாகத் தகவல் தெரிவித்து, அவருடைய வாக்குமூலத்தையே சாட்சியமாக்கிக் கொள்ளும்படி நடந்துகொள்வது. அமெரிக்காவின் குற்றவியல் சட்டம் 5வது திருத்தத்தின் படி, யாரையும் நிர்பந்தித்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்வது தடை செய்யப்பட்ட நடைமுறை. இருப்பினும் இந்த்ச் சட்ட உரிமையை எடுத்துச் சொல்லி, அந்த உரிமையை விட்டுக்கொடுக்க விரும்புவர்களிடமிருந்து தகவல்களைப் பெறலாம்.
பார்க்க: Miranda Vs Arizona State - மிராண்டா Vs அரிசோனா வழக்கு, மிரண்டா உரிமைகள் - ஒரு பெண்குழந்தையைக் கற்பழித்து கொன்றதாக எர்ணஸ்டோ மிரண்டா (Ernesto Miranda) என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் பெற்று காவல் துறை நீதிமன்றத்தில் அறிக்கையிட்டது. மிராண்டாவின் வழக்கறிஞர் அது மிரட்டி வாங்கப்பட்டது என்று வாதாடியும், கீழ்நீதிமன்றம் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் மிராண்டா விசாரணையின் போது மௌனம் காக்க உரிமை படைத்தவர் என்று தெரியாததாலும், அவர் தன் சார்பில் வாதாட ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளாலாம் என்று தெரியாததாலும், காவல்துறை அவர் அறியாமையைப் பயன்படுத்தி வாக்குமூலம் பெற்றதாகக் கூறிய போது விசாரணைக் கைதிகளின் உரிமைகள் பற்றி நீதிமன்றம் விளக்கமளித்தது. அதன்படி கைதி ஒருவர் வழக்கறிஞர் ஒருவரை விசாரணையின் போது வைத்துக் கொள்ளலாமென்றும், விசாரணையின் போது குற்றவாளி மௌனம் சாதிக்க உரிமைபடைத்தவர் என்றும் சொன்னது. விசாரணைக் கைதிகளின் உரிமைகள் பற்றி விசாரணைக் கைதிகளுக்கு காவல்துறை விளக்க வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

English
Providing information directly to law authorities that can be used as evidence for one's own criminal conviction. The U.S. Fifth Amendment rights protect individuals from being compelled to provide such information. However, the individual may offer such information by voluntarily waiving these rights after being informed about them (see Miranda).