semantics

சொற்பொருள் நினைவாற்றல் (semantic memory), சொல், சொல்லின்பொருள் பற்றியும், சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விளக்கும் முறை

தமிழ் விளக்கம்

மொழியானது இரண்டு கூறுகளின் அடிப்படையில் செயல்படக்கூடியது. ஒன்று சொன்மை அடிப்படை. மற்றொன்று பொருண்மை அடிப்படை. ஒலிக்கூறுகள், சொற்கூறுகள், தொடரமைப்புகள் இவற்றை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். இச் சொற்களும், தொடர்களும் பொருளை உணர்த்த, இதனடிப்படையில் பொருண்மை உண்டாகும். சொல்லுக்குரிய பொருள் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் தெரிந்துகொள்ள இயலும். இக்கருத்தைக் கூறவந்த தொல்காப்பியர், “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர்” என்றார். அதாவது, ஒரு சொல் சொல்லாகிய தன்னையும் குறிக்கும். தான் குறிப்பிடும் பொருளையும் குறிக்கும். எ.கா: அவள், இவள் என்னும் சொற்கள் சொல்லின் வடிவத்தை (form) உணர்த்துகின்றன. தாம் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டவில்லை. குறிஞ்சி என்பது குறிஞ்சி என்னும் தன் பெயரையும், குறிஞ்சியாகிய நிலத்தையும் குறிப்பிடுகிறது. இவ்வாறே பாணன் என்ற சொல்லும் தன்பெயரையும் குடிப்பெயரையும் குறிக்கிறது.

English

The study and analysis of the meanings of words and the varying ideas conveyed by the words over time. The term is often used to suggest the twisting of words to confuse or mislead.