semiotics
குறியீடுகள், குறியீட்டியல், குறியியல்
தமிழ் விளக்கம்
சமுதாய வாழ்வில் மக்கள் தங்கள் கருத்தைப் புலப்படுத்தப் பயன்படுத்தும் குறிகளைப் பற்றிய அறிவியல் குறியியல் ஆகும். குறியியலின் அடிப்படை அலகு, ’குறி’ என்பாதாகும். ’குறி’ என்பதை சைகை மற்றும் அடையாளங்கள் எனவும் கொள்ளலாம். எ.கா. சாலைக்குறியீடுகள், கணிதக் குறியீடுகள், பாலினக் குறியீடுகள். பேச்சுத் தமிழிலும் எழுத்துத் தமிழிலும் ’குறி’ என்றச் சொல் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டதாகவே வழங்கப்படுகிறது. 1.ஆண் குறி பெண் குறி 2. குறி தப்பிவிட்டது 3. குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்னும் சான்றுகளில் முறையே அடையாளம், இலக்கு, நோக்கம் என்னும் பொருள்களில் அமைந்திருத்தலைக் காணலாம் குறி என்ற சொல் “அடையாளம்” என்ற பொருளில் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார். குறியெனப் படுவது இரவினும் பகலினும் அறியத் தோன்றும் அற்றது என்ப (களவியல்:40).
2. குறியீடுகளைப்பற்றி ஆராயும் அறிவியல் துறை. பண்பாடு என்பது பலவகையான சமூகக் குறியீடுகளினால் ஆனது என்பதனால் இது முக்கியமான பண்பாட்டு அறிவியலாகும் .மொழியியலுக்கு நெருக்கமான உறவுள்ளது.
2. குறியீடுகளைப்பற்றி ஆராயும் அறிவியல் துறை. பண்பாடு என்பது பலவகையான சமூகக் குறியீடுகளினால் ஆனது என்பதனால் இது முக்கியமான பண்பாட்டு அறிவியலாகும் .மொழியியலுக்கு நெருக்கமான உறவுள்ளது.
English
Aspects of communication theory pertaining to signs and gestures used in language to clarify or obscure what is being communicated.