senescence

முதிர்ச்சியடைதல், முதுமை, மூப்படைதல், முதுமையடைதல்

தமிழ் விளக்கம்

மனித வாழ் நாளின் இறுதி ஆண்டுகளை முதுமை என்கிறோம். ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிப்படியாக மனிதர் முதுமைப்படுவர். இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்றமுடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது. முதுமையும் சாவுமே மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியாத மிக மோசமான கொடுமையாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. ஆகையால், இயன்றவரை வாழ்நாளைக் கூட்டப் பல்வேறு ஆய்வுகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இதுவரை முதுமைப்படுதலைத் தடுக்க, பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட எந்த வழிமுறையும் இல்லை. முதுமைப்படுதலால் உடலின் செயல்பாடு குன்றும். திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றும். மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் உட்படும். இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுதலின் காரணமாகவே ஏற்படுகிறது. உயிரினங்கள் ஏன் முதுமையடைகிறது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருக்கின்றன. எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய முழு விளக்கத்தை இவைகள் தருவதில்லை. ஆவணப்படுத்தப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேல் வாழ்ந்துள்ளனர். மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிகக் கூடிய வாழ்நாள் இதுவரை ஏற்படவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே என்று தெரிய வருகின்றது.

English

The normal biological process of human aging as evidenced by the decline in functioning of various organs and senses. This term, which should be distinguished from senile dementia, implies frailty, vulnerability to illness, and awareness of death but does not necessarily imply disease or death.